ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் அரசியல்.. ஜெகன்மோகன் வீட்டில் ரெய்டு விட்ட அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை குறிவைத்து கடந்த 2017ம் ஆண்டுகளில் சோதனை நடத்திய ஜிஎஸ்டி அதிகாரி காந்தி என்பவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி 3.74 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைபற்றியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்த காலகட்டங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான பண மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை விசாரித்தவர் ஸ்ரீனிவாச காந்தி. இவர் ஹைதராபாத்தில் மத்திய ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

CBI raids on GST officer Bollineni Srinivas Gandhi at hyderabad

அமலாக்கத்துறை இணை இயக்குநராக இருந்த உமாசங்கர் கவுடும், உதவி இயக்குநராக இருந்த காந்தியும் இணைந்து தன்னை சோதனை என்ற பெயரில் வேட்டையாடுவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் தெலுங்கு தேச அரசின் தலையீட்டின் பேரில் தங்கள் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாகவும், பழிவாங்குவதாகவும் கூறியிருந்தார்.

"டெமாக்ரசி"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா

இதனிடையே லஞ்சம் வாங்கி பல கோடி சொத்துக்கள் சேர்த்திருப்பதாக ஸ்ரீனிவாசகாந்தி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். அதன் ஒருபகுதியாக காந்திக்க தொடர்புடைய ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்து 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். காந்தி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில், ஸ்ரீநிவச காந்தியும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு மீறி பல்வேறு அசையும் அசையா சொத்துக்களை சேர்த்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஸ்ரீநிவச காந்தி தனது மகளை ரூ.70 லட்சம் பணம் கட்டி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளதையும், அந்த காலகட்டத்தில் காந்தியின் ஆண்டு வருமானம் 1.30 கோடி ரூபாய் தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல் விஜயவாடா மற்றும் ஹைதரபாத்தில் வருமானத்திற்கு பிறகு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புகள் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

English summary
CBI raids on GST officer Bollineni Srinivas Gandhi, unearths Rs 3.74 crore assets seized
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X