ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூவாலா பெயரே இல்லாமப் போயிருச்சே.. அனுதாபப்படுறேன்.. தேர்தல் அதிகாரி சூப்பர் பதில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜய்க்கு மாதிரியே நிஜத்தில் இவங்களுக்கும் ஓட்டு இல்லையாம்.. வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வரிசையில் காத்திருந்த பிரபல பேட்மிண்ட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்.

    பரபரப்புடன் தெலுங்கானா வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், அதில் சில ஆச்சரியப்படத்தக்க, சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. பெருத்த ஆர்வத்துடன் தெலுங்கானா தேர்தலின் போது வாக்களிக்க சென்ற பிரபல பேட்மிண்ட்டன் வீராங்கனை ஜூவாலா ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

    CEC feels sorry for Shuttler Jwala Guttas Name Missing in Telangana Voter List

    வாக்களிக்கும் சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைனில் தமது பெயர் உள்ளதா என்று ஜூவாலா தேடியுள்ளார். தமது பெயரும், தாயார் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

    தந்தை மற்றும் சகோதரிகள் பெயர் அதில் இல்லை. பரவாயில்லை என்ற நினைத்த அவர், வாக்களிக்க சென்றபோது தமது பெயரும் இல்லாமல் போகவே.. கடுப்பான ஜூவாலா, ட்விட்டரில் பொரிந்து தள்ளிவிட்டார்.

    தமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று ஆன்லைனில் பிரபல பேட்மிண்ட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தேடியுள்ளார். பல தடவை கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்தி பார்க்காத குறையாக பார்த்தாலும் கடைசி வரை தமது பெயர் இல்லாததால் ஏமாற்றமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டரில் ஜூவாலா விவரத்தை தட்டி விட்ட பின்னர், நெட்டிசன்கள் கருத்து சொல்வதாக கூறி, தேர்தல் ஆணையத்தை வசை பாடினர். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் ட்வீட் தான் படு சூப்பர்.

    தமக்கும் இது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக தெலுங்கானா தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு முதலே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற அவர், இதுவரை அவரது பெயர் இணைக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த குறைபாட்டை சரி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

    English summary
    Well known badmitton player Jwala Gutta's name missing from the telangana voters' list, when she went to cast her vote. After she took to tweet, Telangana Chief Electoral Officer said that they will rectify that situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X