ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாம் இருவர் நமக்கு இருவரை விடுங்க.. நான் சொல்வதை கேளுங்க.. ஆந்திர முதல்வரின் புதுமையான அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இளைஞர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க பெற்றோர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜனத்தொகை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள், உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஜனத்தொகை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் அதற்கான தேவைகளும் அதிகரித்து வருகின்றன.

ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எங்கு திரும்பினாலும் குழந்தைகளின் அழுகைகள், சேட்டைகள் என அந்த இடமே அமர்க்களமாக இருக்கும். மக்கள் தொகை பெருக, பெருக நாம் இருவர் நமக்கு இருவர் என்று கூற... பின்னர் அதுவே நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மருவியது.

கிண்டல் பேச்சு

கிண்டல் பேச்சு

அதுவும் ஒரு காலக்கட்டத்தில் காலாவதியாக...நாமே இருவர் நமக்கேன் ஒருவர் என்று கிண்டலான பேச்சுகளாக மாறியது. எது இருப்பினும் ஒவ்வொரு வீட்டிலும் 2 குழந்தைகள் இருக்கும் நிலைமை தற்போது உள்ளனர்.

ஹாட் டாபிக்கான நாயுடு பேச்சு

ஹாட் டாபிக்கான நாயுடு பேச்சு

இந் நிலையில், குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய பேச்சு ஹாட் டாபிக்காக மாறிவிட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

குறைகிறது மக்கள் தொகை

குறைகிறது மக்கள் தொகை

அவர் பேசியது இது தான்:
10 ஆண்டுகளாக ஆந்திராவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநில மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். ஆனால் குறைந்து வரும் மக்கள் தொகையால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும்.

ஊக்கத் தொகை வழங்கப்படும்

ஊக்கத் தொகை வழங்கப்படும்

எனவே ஆந்திராவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக பெற்றோர் அதிக குழந்தைகளைபெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசு தரப்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

தடை நீக்கம்

தடை நீக்கம்

பேச்சை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கியுள்ளார். எது எப்படியோ... அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. பரிசு தருகிறேன் என்ற சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆந்திராவின் இப்போதைய ஹைலைட்.

English summary
To reap the benefits of a few population-related schemes, Andhra Pradesh CM Chandrababu Naidu has asked people of the state to have more kids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X