பேருந்து ஊழியர்கள் போராட்டத்திற்கு இப்படி கூட செக் வைக்கலாமா! தெலுங்கானா முதல்வர் ஷாக் அறிவிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா போக்குவரத்து கழகத்தை 50% தனியார் மயமாக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த இரன்டு வாரமாக தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பாக தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், ஓய்வு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடந்து வருகிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. உலக நாடுகள் வரவேற்றது.. பாங்காக்கில் பிரதமர் மோடி பேச்சு!

கடும் எதிர்ப்பு
அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கிய போராட்டம் தற்போது வரை தொடர்கிறது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவர் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உறுதியாக கூறிவிட்டார். இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

நீக்கினார்
அதோடு தெலுங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள் 48000 பேரை ஒரே கையெழுத்தில் வேலையைவிட்டு நீக்கி உள்ளார். நீங்கள் செய்தது பெரிய குற்றம். இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். உங்களுக்கு பதில் இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறி அவர்களை வேலையைவிட்டு நீக்கினார்.

மக்கள் அவதி
ஓட்டுனர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் என்று பலர் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.தற்போது மாற்று ஆட்களை, தற்காலிக ஊழியர்களை வைத்து இந்த பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இதனால் டிக்கெட் வசூலில் நிறைய விதமான முறைகேடுகள் நடக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இன்னொரு அதிரடி
அதோடு தற்போது தெலுங்கானா போக்குவரத்து கழகத்தை 50% தனியார் மயமாக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி 10400 பேருந்துகளில் 5100 பேருந்துகளை தனியார் இயக்கலாம் என்று அவர் கூறி இருக்கிறார்.

ஷாக்கிங்
இந்த முடிவை திரும்ப பெற மாட்டேன். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களுக்கு 3 நாள் அவகாசம். அதற்குள் பணிக்கு திரும்பவில்லை என்று மிக முக்கியமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!