ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடங்கியது 2-வது இன்னிங்ஸ்.. தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்!

    ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றுள்ளார்.

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மாநில கட்சிகளும் , காங்கிரஸ் கட்சியும் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. பாஜக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

    முக்கியமாக தெலுங்கானாவில் சந்திர சேகர ராவின் ராஷ்டிரிய சமிதி ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று பலரும் கணித்த நிலையில் சந்திரசேகர ராவ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

    மிக சிறப்பான வெற்றி

    மிக சிறப்பான வெற்றி

    தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 21 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது, பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    தீர்மானம்

    தீர்மானம்

    இதனால் தெலுங்கானாவில் அறுதிபெரும்பான்மையுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மீட்டிங் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதல்வராக பதவியேற்றுள்ளார்

    முதல்வராக பதவியேற்றுள்ளார்

    இதையடுத்து தெலுங்கானா முதல்வராக இன்று சந்திரசேகர ராவ் பதவியேற்றுள்ளார். இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராகி உள்ளார். சரியாக அவரின் விருப்பப்படியே இன்று மதியம் 1.25 மணிக்கு சந்திரசேகர ராவ் பதவியேற்றுள்ளார்.

    பிரமாணம் செய்து வைத்தார்

    மதியம் நடந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் நரசிம்மன் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சந்திரசேகர ராவுடன் தெலுங்கானாவின் முன்னாள் துணை முதல்வர் முகமது அலியும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஒரு வாரத்திற்கு பிறகே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Chandrashekar Rao will be sworn as the CM of Telangana for the second in the row today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X