ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா சாமிக்கும் இந்தியக் குடியுரிமை கொடுங்க.. அதிர வைக்கும் அர்ச்சகர்.. அரசு முடிவு என்னவோ?

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட இந்து கடவுள்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என சில்கூர் கோயில் தலைமை அர்ச்சகர் கோரியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உஸ்மான்சாகர் ஏரிக்கரை அருகில் சில்கூர் பாலாஜி கோயில் உள்ளது. வெளிநாடு செல்ல விசா கிடைக்க விரும்புவோர் சில்கூர் கோயிலில் பெருமாள் காலடியில் வைத்து பாஸ்போர்ட்டுகளை வைத்து வணங்கினால் விசா விரைவில் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

Chilkur Balaji temple Priest Rangarajan asks Give citizenship to the deities

இதனால் இங்குள்ள பெருமாளுக்கு விசா பாலாஜி என பெயர். இந்த நிலையில் பெருமாளுக்கு குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என சில்கூர் கோயில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் கடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அர்ச்சகர், அறங்காவலர் அல்லது நிர்வாக அதிகாரி போன்ற நட்பு நபர்கள் மூலம்தான் நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.

சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பாக்கோடா சுடும் போராட்டம்...!சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பாக்கோடா சுடும் போராட்டம்...!

திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி, ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உள்ளிட்ட இந்து தெய்வங்களுக்கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு குடியுரிமை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பு விதிகள், நீதித் துறையின் உத்தரவுகள் இருந்த போதிலும் இந்து கோயில்கள், மத அறக்கட்டளை நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன என்றார்.

English summary
Chief priest of Chilkur Balaji Rangarajan has sought citizenship for all the deities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X