ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத் தேர்தல் இவிஎம் முறையில் நடக்கலை.. வாக்கு சீட்டுதான்.. 'அப்படியும்' மண்ணை கவ்விய காங்கிரஸ்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குச் சீட்டு முறையில்தான் நடந்துள்ளதே தவிர இவிஎம் முறையில் நடைபெறவில்லை. ஆனால் இங்கு காங்கிரஸ் கட்சி மறுபடியும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

பீகார் உட்பட பல மாநில தேர்தல் முடிவுகள் வெளியான போதெல்லாம், இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மத்தியில் ஆளும் பாஜக முறைகேடு செய்து வென்றது என்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் பலர் முன் வைத்தனர்.

சமூக வலைத்தளங்களிலும் அதுபோன்ற விமர்சனங்களை பார்க்க முடிந்தது.

 மாநகராட்சி தேர்தல்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக.. தப்பியது மாநகராட்சி தேர்தல்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக.. தப்பியது

 ஹைதராபாத் தேர்தல்

ஹைதராபாத் தேர்தல்

ஆனால், இன்று ஹைதராபாத் தேர்தல் ரிசல்ட் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லியுள்ளது. உழைப்பவர்களுக்கு மட்டுமே வெற்றியே தவிர, உட்கார்ந்து சும்மா கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தால் ஓட்டு கிடைக்காது என்பதுதான் அந்த பாடம். மொத்தமுள்ள 150 வார்டுகளில் டிஆர்எஸ் 47, ஓவைசி கட்சி 21, பாஜக 18 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் நிலைமை

காங்கிரஸ் நிலைமை

காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால் அதுவும் எப்போது பறிபோகுமோ தெரியாது என்ற அளவில்தான் உள்ளது. பாஜக கடந்த மாநகராட்சி தேர்தலில் வெறும் 4 வார்டுகளைத்தான் வென்றது. இப்போது இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது.

முயற்சி இல்லை

முயற்சி இல்லை

அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என பல பிரச்சார பீரங்கிகளை அக்கட்சி களமிறக்கியது. ஆனால், காங்கிரஸ் வழக்கம்போல குறட்டைதான் விட்டது. ஆக்ரோஷமே காட்டவில்லை. ஆனால் இந்த தேர்தல் முழுக்க வாக்குச் சீட்டு முறைப்படி நடந்ததே தவிர, இவிஎம் முறையில் நடக்கவில்லை.

காங்கிரசுக்கு பாடம்

காங்கிரசுக்கு பாடம்

எனவே இனியும் காரணத்தைச் சொல்லி, காலத்தை வீணாக்காமல், காரியத்தில் காங்கிரஸ் கண்ணாக இருக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கூட்டணியிலுள்ள கட்சிகளும் எதிர்பார்க்கும் குவாலிபிகேஷன் இது மட்டுமே.

English summary
GHMC Elections held on the ballot paper and not through EVMs, so Congress has to blame themselves only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X