ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐசியூ இல்லை.. கடைசியாக அனுப்பிய மெசேஜ்.. கொரோனாவால் சாகும் முன் செய்தியாளர் சந்தித்த வேதனை.. ஷாக்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஒருவர் மருத்துவமனையில் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    கொரோனாவால் சாகும் முன் செய்தியாளர் சந்தித்த வேதனை

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதியான அன்றே பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் அங்கு ஒரு பிரபல மீடியா ஒன்றில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலைதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்ந்தார். அன்று மாலையே கொரோனா காரணமாக பலியானார்.

    கொரோனாவுக்கு பலியான முதல் தமிழக எம்எல்ஏ ஜெ. அன்பழகன்- சென்னையில் உடல் நல்லடக்கம் கொரோனாவுக்கு பலியான முதல் தமிழக எம்எல்ஏ ஜெ. அன்பழகன்- சென்னையில் உடல் நல்லடக்கம்

    மிக மோசம்

    மிக மோசம்

    இவருக்கு 36 வயதுதான் ஆகிறது. இவருக்கு இதற்கு முன் உடலில் தசைகளை வலிமை இழக்க செய்யும் Myasthenia gravis என்ற குறைபாடு இருந்துள்ளது. அதேப்போல் இவருக்கு மூச்சு விடுவதில் சில வருடங்களாக பிரச்சனை இருந்துள்ளது. இதனால்தான் இவருக்கு சிகிச்சை அளித்தும் பயன் அளிக்கவில்லை என்கிறார்கள். தெலுங்கானாவில் கொரோனா காரணமாக பலியாகும் முதல் செய்தியாளர் இவர்தான். இவர் மதன்னாபேட் பகுதியை சேர்ந்தவர்.

    என்ன வேதனை

    என்ன வேதனை

    இந்த நிலையில் இந்த செய்தியாளர் சாகும் முன் அவர் சந்தித்த வேதனைகள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மிக மோசமான உடல்நிலையுடன்தான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அரசுக்கு சொந்தமான ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு படுக்கை இல்லாத காரணத்தால் நாற்காலியில் உட்கார வைத்து இருந்தனர்.

    நாற்காலியில் இருந்தார்

    நாற்காலியில் இருந்தார்

    ஆம் கொரோனாவோடு மூச்சு விட முடியாமல் இவர் மோசமாக திணறி இருக்கிறார். ஆனாலும் கூட பெட் இல்லாத காரணத்தால் மூச்சுக்கு திணறிய படியே நாற்காலியில் அமர்ந்து இருந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அங்கிருக்கும் எல்லா மருத்துவர்களிடமும் சென்று பெட்டிற்காக கெஞ்சி இருக்கிறார்கள். ஆனாலும் அந்த செய்தியாளருக்கு பெட் கிடைக்கவில்லை. இதனால் அவர் உயிருக்குபோராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மீடியா நண்பர்களுக்கு தொடர்பு

    மீடியா நண்பர்களுக்கு தொடர்பு

    அவர் இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த செய்தியாளரே கொரோனா பாதிப்போடு தனக்கு தெரிந்த மீடியா நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அவர்கள் மூலம் சுகாதார துறை அதிகாரிகள் சிலரிடம் பேசி இருக்கிறார். இதையடுத்து அந்த நபருக்கு ஐசியூவில் இடம் அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவருக்கு பெட் அளிக்கப்படவில்லை.

    ஆக்சிஜன் இல்லை

    ஆக்சிஜன் இல்லை

    வெறும் இருக்கையில்தான் அவர் உள்ளே உட்கார வைக்கப்பட்டார். அதோடு அவருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்ட போதும் கூட ஆக்சிஜன் வழங்கப்படவில்லை. இதனால் அவரின் உடல்நிலை மோசமாகி உள்ளது. இதையடுத்து உள்ளே இருந்து அந்த செய்தியாளர் தனது சகோதரருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் அனுப்பிய அவர் தனது கஷ்டத்தை கூறி இருக்கிறார். உயிருக்கு போராடும் முன் கடைசியாக மெசேஜ் அனுப்பி உள்ளார்.

    பலியானார்

    பலியானார்

    என்னால் மூச்சு விட முடியவில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த ஐசியூ மோசமாக இருக்கிறது. நாம் எங்காவது தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அப்படி மெசேஜ் அனுப்பிய சில நிமிடங்களில் மூச்சு விட முடியாமல் இருக்கையிலேயே பலியாகி உள்ளார். அவரின் மரணம் காரணமாக ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனை பெரும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

    English summary
    Coronavirus: A Telugu reporter's last message before he dies of Covid-19 who is just 34 years old.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X