ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவாசின் (COVAXIN).. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து.. மனித சோதனைக்கு அரசு அனுமதி!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு மனித சோதனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

Recommended Video

    India’s first Covid Vaccine : இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து | Covaxin

    கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. இது தற்போது பெரிய போட்டியாகவே மாறியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

    ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்து உலக அளவில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

    சீனாவை முந்திய தமிழகம்.. இன்று மட்டும் 3949 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை கடந்தது!சீனாவை முந்திய தமிழகம்.. இன்று மட்டும் 3949 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை கடந்தது!

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பை குணப்படுத்தவும் இறப்புகளை குறைக்கவும் டெக்சாமெத்தசோன் (Dexamethasone ) மருந்து பெரிய அளவில் பலன் அளிக்கிறது என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. அதேபோல் உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இப்படி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு மனித சோதனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    நிறுவனம் எது

    நிறுவனம் எது

    ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த மருத்துக்கு கோவாசின் (COVAXIN) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் முதல் கொரோனா வைரஸ் சோதனை மருந்து ஆகும் இது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக SARS-CoV-2ல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. மட்டுப்படுத்தப்பட்ட SARS-CoV-2 வைரஸில் இருந்து இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த தடுப்பு மருந்தில் தீவிரமான சோதனைகளை செய்து இருக்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் நல்ல முடிவை கொடுத்துள்ளது .அந்த நிறுவனத்தில் இருக்கும் BSL-3 (Bio-Safety Level 3) சோதனை கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    ஹைதராபாத்தில் இருக்கும் ஜீனோம் வாலி பகுதியில் இந்த கூடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் மனிதர்களின் மீது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள இந்த மருத்துக்கு மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இதுவரை செய்யப்பட்ட சோதனைகூட சோதனைகளின் இந்த கோவாசின் (COVAXIN) மருந்து நலன் முடிவுகளை கொடுத்துள்ளது. இதன் எதிர்ப்பு சக்தி, பாதுகாப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள்.

    அனுமதி அளிப்பு

    அனுமதி அளிப்பு

    இதனால் மனிதர்கள் மீது சோதனை நடத்த இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதன் சோதனைகள் தொடங்கும் என்கிறார்கள். இந்த கோவாசின் (COVAXIN)ஐ உருவாக்காகி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு முன் போலியோ, ரேபிஸ், ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிக்கன்குன்யா, சிகா ஆகிய வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது .

    English summary
    Coronavirus: Hydrabad Bharat Biotech's Vaccine named Covaxin gets approval for human test for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X