ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனாவுக்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கி இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

Recommended Video

    வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    கொரோனா தாக்கத்தால் தெலுங்கானாவிலும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:

    Coronavirus Lockdown: If required will issue shoot at sight orders, warns Telangana CM

    தெலுங்கானாவில் இரவு முதல் காலை வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதனை மீறினால் 24 மணிநேர தடை உத்தரவு பிறப்பிக்கவும் அரசு தயங்காது.

    அமெரிக்காவைப் போல சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை ராணுவத்திடம் கொடுத்துவிடுவோம். பொதுமக்களில் பலர் லாக்டவுன் உத்தரவை மதிக்காமல் வீதிகளில் நடமாடுவதையும் பார்க்க முடிகிறது. அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

    ஹைதராபாத்தில் 150 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். ஆனால் அதிகாரிகளும் போலீசாரும்தான் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கவுன்சிலர்கள் எங்கே போனார்கள் என்பதுதான் தெரியவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். 14 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்.

    கொரோனா- இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 கொரோனா- இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820

    லாக்டவுன் சட்டங்களை மீறுகிறவர்களுக்கு சில நாடுகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள்தான் வீடுகளில் இருக்க வேண்டுமா? சிறைக்கு போக வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். சட்டங்களை மீறி வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கவும் நேரிடும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

    English summary
    Telangana chief minister K Chandrasekhar Rao has warned that If required will issue shoot at sight order on Coronavirus Lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X