ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: தெலுங்கானா டூ ராஜஸ்தான்.. கண்டெய்னரில் பதுங்கி இருந்த 300 தொழிலாளர்கள்- போலீஸ் ஷாக்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா லாக்டவுனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கூலி தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நீண்டு கொண்டே போகின்றன.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்று கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரியை மகாராஷ்டிரா மாநில எல்லையான யவத்மாலில் போலீசார் மடக்கினர்.

    Coronavirus Lockdown: Maharashtra Police stop a container truck with 300 migrant workers

    அப்போது கண்டெய்னர் எங்கே போகிறது? என போலீசார் கேள்வி கேட்டனர். இதற்கு டிரைவர் சரியான பதிலை சொல்ல முடியாமல் திருதிருவென முழித்திருக்கிறார்.

    இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கண்டெய்னரை திறக்க உத்தரவிட்டனர் போலீசார். அதை திறந்த போது போலீசாருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.

    கண்டெய்னர் லாரியில் 300 கூலி தொழிலாளர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கீழே இறக்கி விசாரித்தனர். அப்போதுதான் லாக்டவுனால் சொந்த மாநிலமான ராஜஸ்தான் செல்ல முடியாமல் தெலுங்கானாவில் தவித்தோம்; எந்த போக்குவரத்தும் இல்லாததால் வேறுவழில்லாமல் கண்டெய்னரில் பதுங்கி செல்கிறோம் என கூறியுள்ளனர்.

    சட்டப்படி இந்த முயற்சி தவறு என்பதால் போலீசார் டிரைவரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த 300 பேரை எப்படி கையாள்வது? எப்படி சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது? என்பது தெரியாமல் தெலுங்கானா போலீசார் இப்போது அதிர்ந்து போயுள்ளனர்.

    English summary
    Maharashtra Police found over 300 migrant workers inside two container trucks from Telangana to Rajasthan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X