ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் குடிமகன்களின் தாகத்தை ஒரு பெக் மூலம் தீர்த்து வைத்த மிஸ்டர் குமார்- வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் மிகவும் அவதிப்பட்டு போயுள்ளனர் குடிமகனார்கள். இவர்களது கவலையை தீர்த்து வைத்த ஹைதராபாத் குமார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

    தெலுங்கானாவில் குடிமகன்களின் தாகத்தை ஒரு பெக் மூலம் தீர்த்து வைத்த மிஸ்டர் குமார்- வைரல் வீடியோ

    இன்றுடன் 20-வது நாளாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் பெரிதும் தவித்து போயினர்.

    Coronavirus lockdown: Youth Distributes liquor to daily wage workers in Hyderabad

    பல மாநிலங்களில் குடிக்க மதுகிடைக்காமல் தற்கொலை செய்தவர்கள் உண்டு. மாற்று வழிகளில் போதையை நாடி பலியாகியும் உள்ளனர். லாக்டவுன் காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராய தொழிலை தூசு தட்டியவர்களும் உண்டு.

    இதனால் லாக்டவுன் காலத்தில் மதுபான விற்பனை என்பது பெரும் பிரச்சனையானது மாநிலங்களுக்கு. இதனை சமாளிக்க மதுபான கடைகளை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கலாமா என்பது குறித்து பல மாநிலங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

    நாட்டில் முதலாவது மாநிலமாக அஸ்ஸாமில் இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டும் விட்டன. இந்நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் குமார் என்கிற இளைஞர், கூலி தொழிலாளர்களுக்கு ஒரு பெக் மதுவை இலவசமாக விநியோகிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஹைதராபத்தின் சம்பாபேட் பகுதியில் வேலை இல்லாமல் அமர்ந்திருக்கும் ஆண்/ பெண் கூலி தொழிலாளர்களுக்கு ஒரு பெக் அளவில் மதுவை தானமாக குமார் வழங்குவதும் அதை மிக்ஸிங் செய்து தொழிலாளர்கள் குடிப்பதுமான காட்சிகள் வீடியோவில் இருக்கின்றன. இதுதான் இப்போது அமோக ஷேரிங் வீடியோ!

    English summary
    A youth has Distributed liquor to daily wage workers in Hyderabad amit Coronavirus Lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X