ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்.. பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியருக்கு உறுதி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இந்தியாவில் ஏற்கெனவே இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ள நிலையில் பெங்களூரை சேர்ந்த 24 வயது மென்பொருள் பொறியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

Recommended Video

    Two New Coronavirus Cases Confirmed in india | மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு மீன் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவி வருகிறது.

    Coronavirus positive for Bengaluru Software Engineer

    இதற்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உயிர் பலி நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

    சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 3000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.

    இது வரை கொரோனா வைரஸால் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இருவர் பலியாகிவிட்டனர்.

    இந்தியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி- மத்திய அரசு இந்தியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி- மத்திய அரசு

    இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருந்து அது குணமான நிலையில் தற்போது இந்தியாவில் மேலும் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இத்தாலிக்கு சென்றுவிட்டு திரும்பியதால் டெல்லி நபருக்கும், துபாய் சென்றுவிட்டு திரும்பியதால் தெலுங்கானா நபருக்கும் கொரோனா பரவியது.

    இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 24 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரில் இருந்து ஹைதராபாத்திற்கு பேருந்தில் வந்த அந்த நபருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தியதில் உறுதி செய்யப்பட்டதாக தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். அவரையும் அவருடன் பேருந்தில் பயணம் செய்தவர்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    English summary
    Coronavirus positive for Bengaluru Software Engineer. He and 80 + bus passengers under watch.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X