ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானா: மார்ச் 31 வரை முழு அடைப்பு- ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1,500 ப்ளஸ் 12 கிலோ அரிசி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தெலுங்கானா மாநிலத்தில் வரும் 31-ந் தேதி வரை முழு அடைப்பு தொடரும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும் 87 லட்சம் ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக 12 கிலோ அரிசியும் ரூ1,500 உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சுய ஊரடங்கு பற்றி மக்கள் கருத்து | #JANATACURFEW | ONEINDIA TAMIL

    கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 5 மணிவரை சுய ஊரடங்கு நீடித்தது.

    Coronavirus: Telangana will be shutdown till March 31, says Chandrasekhar Rao

    பல மாநிலங்களில் இந்த சுய ஊரடங்கு மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இதேநிலைமையை வரும் 31-ந் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இந்த முழு அடைப்பு நீட்டிக்கப்படுவதால், வெள்ளை ரேசன் கார்டு வைத்திருக்கும் 87 லட்சம் பேருக்கு இலவசமாக 12 கிலோ அரிசியும் ரூ1,500 உதவித் தொகையும் வழங்கப்படும்; அத்தியாவசியப் பொருட்களை வாங்க வீட்டுக்கு ஒருவர்தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கல் அறிவிப்பு கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கல் அறிவிப்பு

    இதேபோல் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் வரும் 31-ந் தேதி சுய ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறார். இந்த காலகட்டத்திலும் ரேசன் பொருட்கள் வீடுகளுக்கு வந்து கொடுக்கப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

    English summary
    Telangana Chief Minister Chandrasekhar Rao has announced that state will shutdown till March 31.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X