ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து 3 எம்எல்ஏக்கள் பாதிப்பு.. ஆளும் டிஆர்எஸ் கட்சியை உலுக்கும் கொரோனா.. தெலுங்கானாவில் ஷாக்

தெலங்கானாவில் அடுத்தடுத்து மூன்று டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்தடுத்து மூன்று டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் சத்தம் இன்றி கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்படுவதால் சமூக பரவல் ஏற்பட்டு இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 5,193 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Coronavirus: Three MLA from TRS party in Telangana gets positive for COVID-19

மொத்தம் 187 பேர் அங்கு பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அங்கு 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் அடுத்தடுத்து மூன்று டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி இதனால் அங்கு கலக்கத்தில் உள்ளது. நிசாமாபாத் எம்எல்ஏ பிகாலா கணேஷ் குப்தா நேற்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். அவருக்கு முன் ஜன்கான் தொகுதி எம்எல்ஏ முத்திரெட்டி ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

கடந்த 2 வாரம்தான் மிக மோசம்.. தினமும் 1 லட்சம் கேஸ்கள்.. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா! கடந்த 2 வாரம்தான் மிக மோசம்.. தினமும் 1 லட்சம் கேஸ்கள்.. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா!

Recommended Video

    கொரோனாவால் சாகும் முன் செய்தியாளர் சந்தித்த வேதனை

    அதேபோல் ஞாயிற்றுக்கிழமை காலை நிசாமாபாத் கிராமம் தொகுதி எம்எல்ஏ பாஜிரெட்டி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இவர்கள் மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து அங்கு ஆளும் கட்சியினர் இடையே கொரோனா அச்சம் எழுந்துள்ளது.

    விரைவில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அங்கு கொரோனா சோதனை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Three MLA from Telangana Rashtra Samithi party in Telangana gets positive for COVID-19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X