ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அறிகுறி.. காய்ச்சல், இருமல் இருந்தால் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம்.. தேவஸ்தானம் அறிவிப்பு

கொரானோ அறிகுறி உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரானோ அறிகுறி உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona Virus : சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா அறிகுறி?

    இந்தியாவில் மொத்தம் 44 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. கேரளாவில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்

    பெங்களூரில் ஒருவருக்கும் கொரோனா பாதித்துள்ளது.உத்தர பிரதேசம்தான் இந்த வைரஸ் காரணமாக மோசமாக திணறி வருகிறது. அங்கு 7 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?.. மலேசியா சென்று வந்தவர் என தகவல் சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?.. மலேசியா சென்று வந்தவர் என தகவல்

    தெலுங்கானா எப்படி

    தெலுங்கானா எப்படி

    ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் பணி நிமித்தமாக இவர் துபாய் சென்றுள்ளார். அங்குதான் இவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு இவர் சில ஹாங்காங் நண்பர்களுடன் பழகி உள்ளார். பின் அங்கிருந்து பெங்களூர் வந்துள்ளார்.தற்போது ஹைதராபாத்தில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பணிகள் எப்படி

    பணிகள் எப்படி

    இந்த நிலையில் திருப்பதி கோவிலில் தற்போது தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு எல்லா இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக மக்கள் நடக்கும் பாதை, தங்கும் இடம் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் தற்போது மருத்துவ குழுக்கள் மூன்று பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரம் பயணிகள் வருவது வழக்கம். அப்படி இருக்கும் போது இங்கு நோய் தாக்குதல் ஏற்படுவது மிகவும் எளிது. இதனால் தற்போது காய்ச்சல், வயிற்றுப்போக்கும், ஜலதோஷம் உள்ளவர்கள் கோவிலுக்கு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலில் சோதனை செய்ய வசதிகள் இல்லை. அதனால் காய்ச்சல் உள்ளவர்கள் அவர்களாகவே கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    முன்பு எப்படி

    முன்பு எப்படி

    இதனால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். திருப்பதி கோவிலுக்கு இதனால் வருமானம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா தாக்குதலால் சவுதியில் மெக்கா மசூதி மூடப்பட்டது. இன்னொரு பக்கம் உலகம் முழுக்க பல்வேறு கிறிஸ்துவ வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது முக்கியமான இந்து கோவில் ஒன்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    English summary
    Coronavirus: Tirupati temple advises people not to come if they have a fever or any symptoms of the epidemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X