ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வென்டிலேட்டர் இல்லை.. இறக்கும் முன் மருத்துவமனையின் லட்சணத்தை வீடியோவாக வெளியிட்ட கொரோனா இளைஞர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கொரோனா நோயாளிகளை கையாள்வதில் அலட்சியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை பிடுங்கியதாகவும் இறக்கும் முன்னர் 35 வயது கொரோனா நோயாளி வீடியோவாக எடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,419 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9000 ஆகும். இதுவரை 247 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு தங்கள் உயிரை கொடுத்து ஒரு பக்கம் மருத்துவர்கள் நோயாளிகளை காப்பாற்றி வருகிறார்கள், மறுபக்கம் தங்களது அலட்சியத்தால் நோயாளிகள் உயிரிழக்கவும் காரணமாக இருக்கிறார்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஹரியானா பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதாவுக்கு கொரோனா உறுதி ஹரியானா பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதாவுக்கு கொரோனா உறுதி

கொரோனா நோயாளி

கொரோனா நோயாளி

ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிப்பதே இல்லை என்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை என்றும் இறந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினர் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள செஸ்ட் மருத்துவமனையில் 35 வயது கொரோனா நோயாளி சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவ வசதிகள்

மருத்துவ வசதிகள்

அவர் இறப்பதற்கு முன்னர் மருத்துவமனையின் அவலம் குறித்து வீடியோவாக எடுத்துள்ளார். ஜூன் 24-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துவிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை.

தந்தைக்கு பை பை

தந்தைக்கு பை பை

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள். நான் மூச்சுவிட சிரமப்பட்டு வந்ததால் எனக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் கழித்து அந்த வென்டிலேட்டரை மருத்துவர்கள் நீக்கினார்கள். அப்போது ஏன் என நான் கேட்டபோது, உங்களுக்கு இது போதும் என்றார்கள் என்று அந்த வீடியோவில் கூறிய அந்த இளைஞர், தனது தந்தைக்கு பை பை டேடி என தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் கூறும் உண்மை...
    விளக்கம்

    விளக்கம்

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது நோயாளிக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. அவருக்கு இதய பிரச்சினை இருந்ததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தது. மகாராஷ்டிரா, தெலுங்கானா என இந்தியாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இது போல் சிலர் அலட்சியமின்றி செயல்படுகிறார்கள். வாழ்வாதாரத்தை விட வாழ்வுதான் முக்கியம், எனவே ஊரடங்கை நீட்டியுங்கள் என கூறிய சந்திரசேகரராவின் மாநிலத்தில் இப்படி ஒரு அவலமா?

    English summary
    Covid patient in Hyderabad makes video about hospital's negligence before dying.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X