ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் செல்ல நாய் சாவு.. சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வரின் வீட்டு செல்ல நாய் ஹாஸ்கி மரணம் அடைந்த நிலையில் அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவின் நடவடிக்கை கொடூரமான செயல் என எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

criminal case filed against veterinary doctor after a dog died At CM Chandrashekar Raos residence

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் ஹைதரபாத்தின் பேகம்பட்டில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு சந்திரசேகர் ராவ் 11 நாய்கள் வளர்ந்து வருகிறார்.. இதில் 11 மாத நாய் ஹாஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போனது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் அந்த நாயால், பால் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டு உள்ளது.

இதையடுத்து முதல்வரின் இல்லத்தில் இருந்து நாயை தூக்கிக்கொண்டு பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டு சென்று இருக்கிறார்கள்.. அங்கிருந்த கால் நடை மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், ஊசி போட்டு சிகிச்சை அளித்தார்கள். ஆனால் நாய் ஹாஸ்கி சிகிச்சை பலன் இன்றி இறந்த போனது.

பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!

இந்நிலையில் முதல்வர் இல்லத்தில் நாய்களை பராமரித்து வந்த அஸிப் அலிகான் அளித்த புகாரை ஏற்று போலீசார் கால் நடை மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாய்களை பராமரித்து வந்த அஸிப் அலிகான், மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால், நாய் இறந்து விட்டதாக புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரம் தெலுங்கானா மாநில மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் நடவடிக்கை கொடூரமான செயல் என கடுமையாக விமர்சித்துள்ளன.

பாஜக செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் இது குறித்து கூறுகையில்,. இது ஒரு கொடூரமான நகைக்சுவையாக தெரிவிக்கிறது, தெலுங்கானாவில் டெங்குவால் ஏராளமானனோர் இறந்து வருகிறார்கள். இதற்காக கேசிஆர் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். முதல்வர் சந்திரசேகர் ராவ் நாய்கள் மீது காட்டும் இதே அன்பில் பாதியைகூட மக்கள் மீது வைத்திருந்தால் பல ஏழைக் குழந்தைகள் இறந்திருக்க மாட்டார்கள். இதே அன்பை அவர்கள் மீது முதல்வர் காட்ட வேண்டும் என பாஜக விரும்புகிறது என்றும் கிருஷ்ணா சாகர் தெரிவித்தார்.

English summary
criminal case filed against veterinary doctor after a dog died in the Telangana Chief Minister K Chandrashekar Rao's residence in Hyderabad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X