ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலை சென்றது ஏன்? விலங்கு போட்டீர்களா? என்கவுண்டர் பற்றி நிருபர்கள் சரமாரி கேள்வி.. கமிஷனர் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி கேஸ் என்ன ஆச்சு??? அப்டியே தமிழ்நாடு பக்கமா வந்துட்டு போங்க!

    ஹைதராபாத்: ஹைதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நான்கு குற்றவாளிகளை போலீசார் இன்று அதிகாலை, என்கவுண்டர் செய்துள்ளனர்.

    இந்த என்கவுன்டர் சம்பவம், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட சம்பவ இடத்தில் வைத்துதான் நடந்துள்ளது. காவல்துறை நடத்திய என்கவுண்டர் சம்பவத்தில் சந்தேகங்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

    இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்கள், சரியான தீர்வைக் கொடுக்காது, என்று திமுக எம்பி கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி மற்றும் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஹைதராபாத் என்கவுண்டர்.. போலீசாருக்கு எதிராக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் ஹைதராபாத் என்கவுண்டர்.. போலீசாருக்கு எதிராக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

    அடுக்கடுக்காக கேள்விகள்

    அடுக்கடுக்காக கேள்விகள்

    இந்த நிலையில்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உண்மை கண்டறியும் குழுவை தெலுங்கானா அனுப்ப உள்ளது. இது போன்ற சர்ச்சைகள் உச்சத்தில் உள்ள நிலையில், ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார். அப்போது அவரிடம் நிருபர்கள் அடுக்கடுக்கான கேள்வி கணைகளைத் தொடுத்தனர்.

    அதிகாலை ஏன்

    அதிகாலை ஏன்

    குற்றம் நடந்த இடத்துக்கு அதிகாலை வேளையிலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்ல காரணம் என்ன? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார், நாங்கள் காலை 5.30 மணி அளவில் தான் சம்பவ இடத்துக்குச் சென்றோம். 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய சென்ற போது பொதுமக்கள் கொந்தளித்து தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட்டனர். எனவே, யாருக்கும் தெரியாமல் சம்பவ இடத்துக்குச் சென்று தடையங்களை சேகரிப்பதற்காகத்தான், அதிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்தோம் என்று தெரிவித்தார் கமிஷனர்.

    கைவிலங்கு

    கைவிலங்கு

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட நால்வரும், போலீசாரிடமிருந்து துப்பாக்கியை பறித்து சுட்டதாக கூறுகிறீர்களே, அவர்களுக்கு கைவிலங்கு போடவில்லையா என்ற நிருபரின் கேள்விக்கு, ஆம் அவர்களுக்கு கைவிலங்கு அணிவிக்கப்படவில்லை என்று பதிலளித்தார் கமிஷனர்.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    குற்றவாளிகளுடன் மொத்தம் எத்தனை போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர் என்ற கேள்விக்கு, 10 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர் என்று அவர் தெரிவித்தார். துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு முன்பாக அதை அன்லாக் செய்ய வேண்டும், குற்றவாளிகள் எப்படி போலீசாரின் துப்பாக்கியை பறித்து அன் லாக் செய்து பொலீசாரை நோக்கி சுட முடிந்தது என்ற நிருபரின் கேள்விக்கு, ஏற்கனவே காவல்துறையினர், துப்பாக்கியை, அன்லாக் செய்துதான் வைத்திருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Hyderabad police commissioner VC Sajjanar in a media briefing recounts today's encounter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X