ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் மீது கல்வீசிய போலீஸ்... ஓவைசி திடுக் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது டெல்லி போலீசாரே கல்வீசித் தாக்குதல் நடத்தினர் என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    ஹைதராபாத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் ஓவைசி பேசியதாவது:

    டெல்லியில் போலீசார்தான் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லி வன்முறைகள் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெரும் அவமானம்.

    Delhi cops pelted stones during clashes, says Owaisi

    பாஜகவை சேர்ந்த ஒருவர், டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடுகிறவர்களுக்கு பொதுக்கூட்டத்திலேயே பகிரங்க எச்சரிக்கை விடுக்கிறார். போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று காலக்கெடுவும் விதித்திருக்கிறார்.

    அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் டெல்லியில் தங்கியிருக்கும் நிலையில் இத்தகைய வன்முறைகள் பெரும் அவமானகரமானது. பிரதமர் மோடி அவர்களே! நீங்கள் பாம்புகளுக்கு பால் வார்க்கிறீர்கள்.. நிச்சயம் அவை உங்களையே ஒருநாள் கொத்தத்தான் போகிறது.

    டெல்லி வன்முறைகளில் போலீசாரும் பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தெலுங்கானா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. என்.பி.ஆர். நடைமுறைகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஓவைசி கூறினார்.

    English summary
    AIMIM president Asaduddin Owaisi said that Delhi cops pelted stones during clashes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X