ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது நடுவரை விடுங்க.. நீங்களே இதை பார்த்துட்டு சொல்லுங்க.. தோனி அவுட்டா, இல்லையா?

Google Oneindia Tamil News

Recommended Video

    IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | தோனி அவுட் இல்லை! கதறும் தோனி ரசிகர்கள்

    ஹைதராபாத்: ஐபிஎல் இறுதி போட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தோனிக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட்தான்.

    கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் என்றாலும், அந்த செய்தியைவிட, தோனிக்கு ரன்அவுட் கொடுக்கப்பட்ட விவகாரம்தான், சோஷியல் மீடியாவில் டிரெண்ட்டாகி வருகிறது. ஊரெங்கும், அதைப் பற்றிய பேச்சுத்தான் ஓடிக்கொண்டு உள்ளது.

    நேற்றைய ஐபிஎல் பைனலில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முக்கியமான நேரத்தில் ரன் அவுட் கொடுக்கப்பட்டது.

    ஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்! ஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்!

    ஒரு தருணம்

    ஒரு தருணம்

    தோனி, 2 ரன்கள் எடுத்து இருந்தபோது, 2 ரன்கள் ஓடும் முயற்சியின்போது, ரன் அவுட்டானார். தோனி கிரீசில் பேட்டை வைத்த தருணமும், பந்து ஸ்டெம்பில் பட்ட தருணமும் ஒன்றாக இருந்தது போல 3வது நடுவர் ரீப்ளேயில் பார்த்தபோது தெரியவந்தது. இதனால் முதலில் சிஎஸ்கே ரசிகர்கள், மகிழ்ச்சியடைந்தனர்.

    நடுவரின் ஆலோசனை

    பக்கவாட்டு கோணத்தில் இருந்து பார்த்தபோது, தோனி பேட் க்ரீஸ் மீது இருந்தது. சற்று உள்ளே இருந்தாலும் சந்தேகம் வந்திருக்காது. ஆனால் இது சந்தேகப்படும்படியாக இருந்ததால், 3வது நடுவர் கோணத்தை மாற்றி பார்த்தார். அதாவது பவுலர் திசையிலிருந்து பார்த்தபோது, கிரீசை விட்டு பேட் வெளியே இருந்ததை போல தெரிந்தது. எனவே அவுட் கொடுத்தார்.

    இது பாருங்கள்

    ஆனால், இந்த கோணத்தை பார்த்து அவுட் கொடுப்பது சரியா என்றும் கேள்வி எழுந்துள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்த்த கோணம்தான் சரியானது. இந்த பக்கம் இருந்து பார்த்தால் பேட் தொலைவில் இருப்பது போலத்தான் தெரியும். அது காட்சிப்பிழை. இதை ஏன் நடுவர் கருத்தில் எடுத்தார். இதுபோன்ற கோணத்தை ஸ்டெம்ப்பில் பந்து படுவதை பக்கவாட்டில் இருந்து பார்க்க முடியாவிட்டால்தான் கருத்தில் எடுக்க வேண்டும். ஆனால் தோனி ரன் அவுட் விஷயத்தில் பக்கவாட்டு கோணம் பக்காவாக ஸ்டெம்ப்பு மற்றும் க்ரீசை காட்டுகிறதே என்ற கேள்விகள் எழுகின்றன.

    கடவுளின் கை

    கடவுளின் கை

    நீங்களே சொல்லுங்கள். தோனி ரன்அவுட் ஆனாரா இல்லையா? கால்பந்து ஜாம்பவான், மரடோனாவின் 'கடவுளின் கை' கோல் போல, தோனியின் ரன் அவுட்டும் சர்ச்சைக்குரியதாகவே நீடிக்கிறது. நீங்களே ஒரு நல்ல தீர்ப்பாக சொல்லுங்கள்!

    English summary
    Readers you can decide Dhoni is really get run out or not, compare these photos and decide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X