• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாய்ந்து வந்து காலை கவ்விய சிறுத்தை.. காப்பாற்ற வந்த தெரு நாய்கள்.. ஹைதராபாத்தில் திக் திக்- வீடியோ

|

ஹைதராபாத்: இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத் நகருக்குள், சிறுத்தை வந்து மனிதனை கவ்வி இழுக்க முடிந்தது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா. அதுபோன்ற ஒரு திக் திக் வீடியோ காட்சி பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலோ, என்னவோ தெரியவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி விட்டன போலும்.

அதேபோன்ற ஒரு நிலைதான் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகரில் நடந்துள்ளது. ஒரு சிறுத்தை மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் அங்கும் இங்கும் ஓடுகிறது. இதைப்பார்த்த பயந்து போன ஒரு நபர் அருகே இருந்த லாரியில் ஏறி தப்புகிறார்.

என்னம்மா கேவலமா பேசறியே என்பதற்கும்.. நீ கேவலமான பெண் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.. கஸ்தூரி கோபம்

கவ்வி பிடித்த சிறுத்தை

கவ்வி பிடித்த சிறுத்தை

இன்னொருவர் சாலையின் ஓரத்தில், சுவர் பக்கத்தில் பயந்து போய் நின்றார். ஆனால் அவருக்கும் பயம் அதிகரித்துவிட்டதால், திரும்ப லாரியை நோக்கி ஓடுகிறார். அவர் லாரியில் ஏறியபோது, தொங்கிக்கொண்டிருந்த காலை, சிறுத்தை கவ்விப் பிடித்து இழுத்தது. இதனால் மனிதன் பாவம்.. வலியாலும், அச்சத்தாலும், அலறிவிட்டார்.

ஓடிய சிறுத்தை

ஓடிய சிறுத்தை

நல்லவேளை அதற்குமேல் அது எதுவும் செய்யாமல் வாயை எடுத்துவிட்டு சாலையின் ஓரத்துக்கு திரும்பி ஓடியது. கடிபட்ட அந்த நபர், எப்படியோ லாரிக்குள் ஏறிவிட்டார். இந்த நிலையில்தான், நான்கைந்து தெரு நாய்கள் கூட்டமாக சிறுத்தையை நோக்கி சூழ்ந்தன. இது யாருடா இது, பெரிய சைஸ் நாய் ஒன்று நம்ம ஏரியாவுக்குள்ள புதுசா வந்திருக்கு.. என்ற ரீதியில், அவை சிறுத்தையை பார்த்து, முறைத்தன.

நாய்கள் vs சிறுத்தை

நாய்கள் vs சிறுத்தை

மேலும், அந்த நாய்கள் சிறுத்தையை பார்த்து குரைக்கத் தொடங்கின. சிறுத்தை அந்த நாய்களை பார்த்து முறைக்கத் தொடங்கியது. மனிதனை மறந்து விட்டு இப்போது நாய் கூட சண்டை போடுவதற்கு சிறுத்தை ஆயத்தமானது. இருப்பினும் எண்ணிக்கை அதிகம் என்பதால், சிறுத்தை திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்து விட்டது. இந்த சம்பவம் மே 14ம் தேதி காலை 8.41 மணிக்கு, அங்குள்ள சிசிடிவியொன்றில் பதிவாகியுள்ளது.

தெரு நாய்களால் நன்மை

தெரு நாய்களால் அந்த பகுதியில் இருந்து சிறுத்தை விரட்டியடிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். ரோட்டில் சுற்றித் திரியும் நாய்களால் மனிதனுக்கு இப்படியும் ஒரு நன்மை என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள். இந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
CCTV footage of Hyderabad Leopard after running away from Main Road on 14th May at 8:41 am just before it jumped into Agricultural Farm.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more