ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடிகாலையில்.. ஓடி கொண்டிருந்த கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்!

காயங்களுடன் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் டாக்டர் ராஜசேகர்

Google Oneindia Tamil News

Recommended Video

    விடிகாலையில்.. ஓடி கொண்டிருந்த கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்!

    ஹைதராபாத்: விடிகாலை, தூக்க கலக்கத்திலேயே காரை ஓட்டி வந்த நடிகர் ராஜசேகர், நடுரோட்டில் இருக்கும் டிவைடரில் போய் தெரியாமல் மோதி விபத்தில் சிக்கி விட்டார்.. எனினும் பெரிய காயங்கள் இன்றி அவர் உயிர் தப்பிவிட்டார்!

    ராஜசேகர்.. டாக்டர் ராஜசேகர் என்றால்தான் தெரியும்.. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.. பாரதிராஜாவின் புதுமைபெண் படத்தில் அறிமுகமானார்.. ஆனால் போதுமான வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு படம் பக்கம் ஒதுங்கினார்.. இவரது திறமையை கோலிவுட் நன்றாகவே பயன்படுத்தி கொண்டது.

    ஆவேசம், ஆக்‌ஷன், அதிரடிகளால் அம்மாநிலத்தில் முன்னணி வரிசைக்கு வந்தார் ராஜசேகர்.. இதுதான்டா போலீஸ், எவன்டா உங்க எம்எல்ஏ போன்ற டப்பிங் படங்களில், எதிரிகளை கத்தியும்.. குத்தியும்.. வசூலை அள்ளினார்.. இப்போதும் படங்களில் நடித்து வருகிறார் டாக்டர் ராஜசேகர்.

    அப்பா பிசினஸைப் பார்க்க அமெரிக்கா சென்ற இந்தியர்.. திருட வந்த கொள்ளையனால் சுட்டுக் கொலைஅப்பா பிசினஸைப் பார்க்க அமெரிக்கா சென்ற இந்தியர்.. திருட வந்த கொள்ளையனால் சுட்டுக் கொலை

    கோல்கொண்டா

    கோல்கொண்டா

    இவர், தன்னுடைய பென்ஸ் காரில், விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத்துக்கு நேற்றிரவு கிளம்பினார். விடிகாலை 2 மணி இருக்கும்.. பெத்த கோல்கொண்டா பகுதிக்கு அருகே அவுட்டர் ரிங் சாலையில் இவர் வந்தபோது, ரோட்டில் இருக்கும் டிவைடரில் கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

    ஏர் பேக்குகள்

    ஏர் பேக்குகள்

    ஆனால், விபத்து நடந்ததுமே காருக்குள் இருக்கும் ஏர் பேக்குகள் செயல்பட்டுள்ளதால் பெரிய அளவிலான காயங்கள் தவிர்க்கப்பட்டன. ஆனால், காரின் முன் பகுதி மொத்தமாக அப்பளமாக நொறுங்கிவிட்டது. டிரைவர் கூட இருந்தாலும் ராஜசேகர்தான் கார் ஓட்டி வந்ததாக தெரிகிறது. ஒருவேளை டிரைவருக்கு ரெஸ்ட் தந்துவிட்டு, காரை ராஜசேகர் ஓட்டியிருக்ககூடும்.

    டிரைவர்

    டிரைவர்

    விபத்து நடந்த இடம் மிகப்பெரிய சாலை என்பதால், மக்கள் நடமாட்டம் அந்த நேரத்திலும் நிறையவே இருந்தது. அதனால்தான் கார் மோதியதும், பலரும் ஓடிவந்து, ராஜசேகரையும், டிரைவரையும் காருக்குள் இருந்து மீட்டனர். உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போது சிகிச்சை முடிந்து 2 பேருமே வீட்டுக்கு வந்துவிட்டனர். விபத்து பற்றி போலீசுக்கும் ராஜசேகர் தகவல் தெரிவித்தார்.

    ஜீவிதா

    ஜீவிதா

    பொழுதுவிடிந்ததுமே, ராஜசேகருக்கு கார் விபத்து என்ற செய்தியை கேட்டு ஆந்திர மக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். ஆனால், ராஜசேகரின் மனைவி, ஜீவிதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.. போலீஸாரிடமும் தகவல் சொல்லியாயிற்று.. கார் டயர் ரிப்பேர் ஆகிவிட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது, ராஜசேகர் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    telugu actor doctor Rajasekhar injured in accident in hyderabad and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X