ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவிகன் மருந்து அறிமுகம் .. டாக்டர் ரெட்டி நிறுவனம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத் : லேசான மற்றும் மிதமான கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவில் அவிகன் (ஃபாவிபிராவிர்) 200 மி.கி மாத்திரைகள் அறிமுகம் செய்யப்படுவதாக டாக்டர் ரெட்டி லெபாரட்டரீஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது.

Recommended Video

    China Corona Vaccine : டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் | Oneindia Tamil

    அவிகன் (ஃபாவிபிராவிர்) மருந்து வெளியீடு என்பது புஜிஃபில்ம் டொயாமா கெமிக்கலுடனான உலகளாவிய உரிம ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

    Dr Reddys launches Avigan (Favipiravir) for coronavirus treatment in india

    இந்தியாவில் அவிகன் டேப்லெட்டுகளை உற்பத்தி செய்ய, விற்க மற்றும் விநியோகிக்க டாக்டர் ரெட்டி லெபாரட்டரீஸ் நிறுவனம் பிரத்யேக உரிமை வைத்துள்ளது.. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு மத்திரையான அவிகனுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

    டாக்டர் ரெட்டி லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.வி.ரமணா இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில். "இந்த முக்கியமான புதுமையான மருந்தை இந்தியாவில் நோயாளிகளுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உயர் தரம் மற்றும் செயல்திறன், மலிவு விலை மற்றும் சிறந்த நோய் மேலாண்மை ஆகியவற்றின் தேவையே எங்களுக்கு முக்கியமான முன்னுரிமைகள். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவிகன் ஒரு சிறந்த சிகிச்சை விருப்பத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." இவ்வாறு கூறினார்.

    திருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல் திருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல்

    டாக்டர் ரெட்டியின் அவிகன் 122 மாத்திரைகளின் முழுமையான சிகிச்சை தொகுப்பு 2 வருட காலத்திற்குள் பயன்படுத்தக்கூடிய அளவில் வெளியிடப்பபடுகிறது. இந்த மருந்து அனைத்து தரப்புக்கும் விரைவாக கிடைப்பதை உறுதி செய்தற்காக டாக்டர் ரெட்டி நிறுவனம் நாடு முழுவதும் 41 நகரங்களில் இலவசமாக வீட்டிலேயே விநியோகிக்கும் சேவையைத் தொடங்கியுள்ளது.

    English summary
    Dr Reddy's announced the launch of Avigan (Favipiravir) 200 mg tablets in India for treatment of Covid-19 patients with mild to moderate symptoms
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X