ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் 3 அடி உயரம்தான்... டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டேன்... தெலுங்கானாவில் ருசிகரம்....

Google Oneindia Tamil News

ஐதராபாத் : இந்தியாவிலேயே முதல் முறையாக 3 அடி உயரம் கொண்ட ஒருவருக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

42 வயதான 3 அடி உயரம் கொண்ட நருக்கு லைசென்ஸ் கிடைத்திருப்பது தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

3 அடி உயரமே என்றாலும் தன்னுடைய உயரத்திற்கேற்ப காரில் சில மாற்றங்களை செய்து ஓட்டக் கற்றுக்கொண்டார் ஷிவ்லால்.

இந்தியாவில் மெல்ல பரவும் ஓமிக்ரான் : அலை வருமா என 2 மாதத்தில் தெரியுமாம் இந்தியாவில் மெல்ல பரவும் ஓமிக்ரான் : அலை வருமா என 2 மாதத்தில் தெரியுமாம்

மூன்று அடி உயர மனிதர்

மூன்று அடி உயர மனிதர்

தெலுங்கானா மாநிலம் குகத்பள்ளியில் வசித்து வருபவர் ஷிவ்லால். இவருக்கு 42 வயது ஆகிறது. ஆனால் இதுவரை கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்கவில்லை. வாங்கவில்லை என்பதை விட அரசாங்கம் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் அவரது உயரம் 3 அடி மட்டுமே. 3 அடி உயரம் கொண்ட எவராலும் காரை ஓட்ட முடியாது என்பதால், அவரால் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியவில்லை. கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறவும் முடியவில்லை.

காரை ஓட்ட பழகினார்

காரை ஓட்ட பழகினார்

சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஷிவ்லாலுக்கு இருந்தது. ஆனால் இவரது உயரத்தை பார்ப்பவர்கள் இவருக்கு கார் ஓட்ட சொல்லித் தருவதற்கு தயங்கி வந்தனர். ஆனால் இவரது ஆர்வத்தை கண்டுகொண்ட தனியார் டிரைவிங் ஸ்கூல் ஒன்று இவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தது. இவருடைய காரில் சில மாற்றங்கள் செய்து கார் ஓட்டக் கற்றுக்கொடுத்துள்ளது. கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது நிறைய சிரமங்களை அனுபவித்தார் ஷிவ்லால். ஆனாலும் யூடியுப்பிலும் கார் ஓட்டுவது குறித்து கற்றுக்கொண்டார். உயரம் குறைவாக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் டிரைவிங் கற்றுக் கொண்டார்.

ஓட்டுநர் உரிமம் வாங்கினார்

ஓட்டுநர் உரிமம் வாங்கினார்

பின்னர் அவருக்கு வழக்கமான தேர்வுகளை வைத்த போக்குவரத்து அதிகாரிகள், அவர் கார் ஓட்டுவதை பார்த்து திருப்தி அடைந்தனர். பின்னர் அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். நாட்டிலேயே முதன் முறையாக 3 அடி உயரம் கொண்டவர் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றவர் என்ற பெருமை ஷிவ்வாலுக்கு கிடைத்து உள்ளது. தற்போது இவர் மற்றவர்களுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும் இவரே தனியாக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சாதனையாளர் பட்டியலில் இடம்

சாதனையாளர் பட்டியலில் இடம்

இவரது முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது மட்டுமின்றி மூன்று அடி உயரமுள்ளவர் நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர் என்ற அடிப்படையில் அவருக்கு தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அமெரிக்காவில் 3 அடி உயரம் கொண்டவர் கார் ஓட்டுவது இவருக்கு இன்ஸ்பிரஷனாக அமைந்தாக தெரிவித்தார்.

English summary
For the first time in India, a 3-foot-tall person has been issued a driver's license. The 42-year-old 3-foot-tall narcissist is listed in the Telugu Book of Records and Limca Record Book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X