• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அரை நிர்வாண பெண்.. பெண் போலீஸார் மீது பாய்ந்து பாய்ந்து தாக்குதல்.. கடித்து குதறிய பரபரப்பு வீடியோ

|
    அரை நிர்வாண பெண்... கடித்து குதறிய பரபரப்பு வீடியோ

    ஹைதராபாத்: அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம் பெண் ஒருவர், பெண் போலீசார்களை எகிறி எகிறி உதைக்கிறார்.. பாய்ந்து பாய்ந்து தாக்குகிறார்.. கடித்து கடித்து குதறுகிறார்.. இப்படி ஒரு ஷாக் வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

    ஹைதராபாத்.. ஜஹிரனங் ரோடு.. இரவு நேரம்.. ஃபுல் போதை.. அரை நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். ரோட்டில் போவோர், வருவோர் இந்த இளம்பெண்ணை பார்த்து கொண்டே நகர்ந்தனர்.. தகவலறிந்து பஞ்சாரா ஹில்ஸ் பெண் போலீசார் விரைந்து வந்தனர்.

    நைட் நேரம் என்பதால், பாதுகாப்புக்காக ஸ்டேஷன் தூக்கி வந்து படுக்க வைத்தனர். இரவெல்லாம் நன்றாக தூங்கிவிட்டார்.. காலையில் போதை தெளிந்து எழுந்த பெண், தான் போலீஸ் ஸ்டேஷனில் இரப்பதை கண்டு அதிர்ச்சியானார். "நான் எங்கே இருக்கேன்? என்னை ஏன் ஸ்டேஷன் கொண்டுவந்தீங்க" என்று கேட்டார்.

    டியூட்டி

    டியூட்டி

    அப்போது டியூட்டியில் இருந்த பெண் எஸ்ஐ மற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் இரவு நடந்ததை பற்றி எடுத்து சொன்னார்கள். இதை கேட்டதும் டென்ஷன் ஆன அந்த பெண்ணுக்கு கோபம் தலைக்கேறியது.. அது எப்படி என்னை இங்கே கூட்டிட்டு வரலாம் என்று கேட்டு பெண் போலீசாரை சரமாரியாக தாக்கினார். பிறகு அங்கிருந்தும் தப்ப முயன்றார்.

    கொள்ளையர்களை ஒடுக்க.. மதுரைக்கு புதிதாக 4 போலீஸ் ஸ்டேஷன்.. ஆணையர் டேவிட்சன் தகவல்!

    கடித்து விட்டார்

    கடித்து விட்டார்

    ஆனால், அந்த பெண்ணை ஸ்டேஷன் விட்டு போகாதமாறு பெண்போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இன்னும் ஆவேசம் அடைந்த இளம்பெண், தன்னை தடுத்து நிறுத்த வந்த பெண் எஸ்ஐ-யின் கழுத்தை நறுக்கென கடித்தார்.. மேலும் 2 கான்ஸ்டபிள்களின் கைகளையும் நறுக்கென கடித்தார். அது மட்டுமல்லாமல், அவர்களின் காக்கி சட்டைகளையும் இழுத்து பிடித்து, திரும்பவும் அவர்களை அடிக்க ஆரம்பித்தார்.

    நாகலாந்து

    நாகலாந்து

    பிறகு ஸ்டேஷனில் உள்ள எல்லா பெண் போலீசும் அவரை இழுத்து பிடித்துவிட்டனர். இதையடுத்து தங்கள் பாணி விசாரணைக்கு கொண்டு வந்தனர். அப்போதுதான், அந்த பெண் அங்கிருக்கும் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் என்பதும், நாகலாந்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    வீடியோ

    வீடியோ

    பெண் போலீசாரை அடித்தது, உதைத்தது, கடித்தது, என எல்லாம் சேர்த்து, இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இறுதியாக அவர் காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ஸ்டேஷனுக்குள் பெண் போலீசாரை அடித்து நொறுக்கும் இந்த வீடியோதான் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    drunk it young girl attacks women police in police station and this shocking video goes viral on socials
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more