ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அட்ராசிட்டி" அகிலா.. பெண்களை ரூமுக்குள் அடைத்து.. கடத்தி.. ஷாக் தந்த அமைச்சர்.. ஆடிப்போன ஆந்திரா

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் கைதாகி உள்ளார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கடத்தல் விவகாரம் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அகில பிரியா தன் கணவருடன் கைதாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் சொந்தக்காரர் பிரவீன் ராவ்... இவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.

Ex Andhra Pradesh Minister arrested for land issue

இந்த நிலம் தொடர்பான ரொம்ப வருஷமாகவே சர்ச்சை இருந்து வருகிறது.... இந்த நில விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியாவும் அவருடைய கணவர் பார்கவ் ரெட்டியும் பஞ்சாயத்து செய்து வந்தார்களாம்!

இந்நிலையில் சம்பவத்தன்று ஹைதராபாத்தில் உள்ள பிரவீன் வீட்டிற்கு 2 கார்களில் வந்த 15 பேர் வந்துள்ளனர்.. அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.. பின்னர் பிரவீன் ராவ், அவருடைய சகோதரர்களான நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரிடம் விசாரணை செய்வது போல் நடித்துள்ளனர்.. இதற்கு பிறகுதான் வேலையை காட்டி உள்ளனர்.

திடீரென அந்த வீட்டிலிருந்த பெண்களை தனி ரூமில் பூட்டி வைத்தனர்.. பிறகு அந்த சகோதரர்கள் 3 பேரையும் தங்களுடைய கார்களில் ஏற்றி கடத்தி சென்றவிட்டனர்.. இது தொடர்பாக பிரவீன் ராவ் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.. அந்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...நான் முற்றிலும் நலமாக உள்ளேன்...சவுரவ் கங்குலி பேட்டி!மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...நான் முற்றிலும் நலமாக உள்ளேன்...சவுரவ் கங்குலி பேட்டி!

அந்த காட்சிகளின் உதவியுடன், ஹைதராபாத் புறநகர் பகுதியில் சம்பந்தப்பட்ட 2 கார்களையும் மடக்கி பிடித்தனர்.. பிரவீன் ராவ் மற்றும் அவரது சகோதரர்கள் நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரையும் பத்திரமாக மீட்டனர். அந்த காருக்குள் 8 பேர் இருந்தனர்.. அவர்களையும் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்..

அப்போதுதான், அவர்கள் அகில பிரியாவின் பெயரை சொன்னார்கள்.. அவரும், அவருடைய கணவர் பார்கவி ரெட்டி ஆகியோர் சொல்லிதான் இதையெல்லாம் செய்தோம் என்று வாக்குமூலம் தந்தனர்.. இதையடுத்து, அகில பிரியா தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. ஒரு முன்னாள் பெண் அமைச்சரே இப்படி ஒரு காரியத்தில் துணிந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Ex Andhra Pradesh Minister arrested for land issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X