ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும்பான்மைக்கு வாய்ப்பே இல்லை.. அமித் ஷாவிற்கு சென்ற வார்னிங்.. ஜெகனுடன் பேச பிளான்!

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் வெற்றியை தீர்மானிக்க போகும் 3 மாநிலங்கள்- வீடியோ

    ஹைதராபாத்: ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வருகிறது.

    நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கொஞ்சமும் நினைக்காத முடிவுகள் நேற்று வெளியானது.

    Exit poll results wont come true: Amit Shah will hold talks with Jagan Mohan Reddy

    அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் கூறுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

    காங்கிரஸ் கூட்டணி, மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் மிக மோசமாக மண்ணை கவ்வும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இதை கொஞ்சம் கூட நம்பவில்லை என்கிறார்கள்.

    ஆம், எக்ஸிட் போல் முடிவுகள் எல்லாம் தவறாகவே வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக பாஜக கூட்டணியாகவோ, தனியாகவோ பெரும்பான்மை பெற வாய்ப்பு கிடையாது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவதுதான் சரி என்று அமித் ஷா முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

    அசாமில் தற்கொலை செய்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்.. ராணுவ மரியாதையுடன் வேலூரில் உடல் அடக்கம் அசாமில் தற்கொலை செய்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்.. ராணுவ மரியாதையுடன் வேலூரில் உடல் அடக்கம்

    இந்த நிலையில் தற்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது.

    லோக்சபாவில் மெஜாரிட்டி பெற இவரின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால், ஜெகன் மோகன் ரெட்டியிடம் அமித் ஷா பேச உள்ளதாக தகவல்கள் வருகிறது. அதேபோல் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவிடம் அமித் ஷா பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தேசிய அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Exit poll results won't come true: BJP chief Amit Shah will hold talks with Jagan Mohan Reddy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X