"மிஸ்ஸாகாது".. திடீர்னு மேடையேறி.. புடவையை சும்மா ஏத்தி கட்டி, திருப்பதியை திகைக்க வைத்த நடிகை ரோஜா
ஹைதராபாத்: நடிகை ரோஜாவின் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. காண்போரையும் திகைக்க வைத்து வருகிறது.. என்ன காரணம்?
நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி தந்தார்.. ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா..
ரோஜா சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது.... என்ன ஒரு பொருத்தம் சீரியலுக்கும் நடிகைக்கும்!?

நடிகை ரோஜா
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல அதிரடிகளை செய்தவர்.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, மேற்கொண்ட செயல்திட்டங்களும், அறிவிப்புகளும் மக்களிடம் விரைந்து சென்றடைந்தன.. இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருபவர்...

ஹேப்பி டான்ஸ்
சமீபத்தில் இவருக்கு அமைச்சர் பதவியும் தானாகவே தேடி வந்தது... சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்... இந்நிலையில், சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.. அந்தவகையில், திருப்பதியில் கலாச்சாரத்தை மேம்படுத்த நடைபெற்ற கலைநிகழ்ச்சி நடந்தது..

சேலையை செருகி
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டார்.. ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதால், மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.. மாணவிகள் மேடையில் நடனமாடி கொண்டிருக்கும்போது, அதை கைதட்டி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருந்தார் ரோஜா.. ஆனால், டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மேடையில், திடீரென ரோஜாவையும் மேடைக்கு வருமாறு அழைத்தார்.. மாணவிகள் ஆசையாக கூப்பிட்டதுமே, டக்கென மேடையேறினார் நடிகை ரோஜா.. இதை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை.. மேடையில் ஏறிய ரோஜா, புடவையை இழுத்து செருகி, அந்த மாணவிகளுடன் டான்ஸ் ஆடி அசத்தினார்...

சகஜ டான்ஸ்
மாணவிகள் ஆடுவதை போலவே, அவர்களை பார்த்து பார்த்து டான்ஸ் ஆடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.. இந்த மாஸ் டான்ஸ்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அரசியலில் இறங்கினாலும், அமைச்சராகவே பதவிவகித்தாலும், மாணவிகளுடன் சகஜமாக ஆடிய நடனம், காண்போரை வியக்க வைத்து வருகிறது. இதற்கு பிறகு, அந்த நிகழ்ச்சியில் ரோஜா பேசும்போது, குழந்தையாக இருந்தபோது அமைதியாக இருந்தேன்... அப்போது இது போன்ற சான்ஸ்கள் எனக்கு கிடைப்பதில்லை.. ஆனால், இப்போ சான்ஸ் கிடைச்சாச்சு.. அதனால், அந்த சான்ஸை மிஸ் பண்ண முடியல.. அதான் பயன்படுத்தி கொண்டேன்" என்றார்..