ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரவாயில்லையே ஸ்டாலின் பேச்சுக்கு இத்தனை மதிப்பா?.. புதிய அரசு அமைய காங்கிரஸின் ஆதரவு கோரும் ராவ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங். அணியில் இணைய ஸ்டாலின் விடுத்த அழைப்பால் ஷாக் ஆன கே.சி.ஆர்.

    ஹைதராபாத்: மத்தியில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸின் ஆதரவையும் கோருவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    தேசிய அளவில் இரு கட்சிகள் பாஜக, காங்கிரஸ் ஆகியன ஆட்சியை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இல்லாமல் பிரதமர் பொறுப்பை மாநில கட்சிகளே ஏற்க வேண்டும் என்ற கொள்கையுடன் 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவ் மாநில கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது தேசிய முற்போக்கு கூட்டணியில் நீங்கள் இணையலாமே என ஸ்டாலின் அழைப்பு விடுத்து ராவுக்கு ஷாக் கொடுத்தார்.

    முடிவை சொன்ன போது அத்வானி அழுதார்.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு போவதை தடுக்கவில்லை.. சத்ருகன் சின்ஹா முடிவை சொன்ன போது அத்வானி அழுதார்.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு போவதை தடுக்கவில்லை.. சத்ருகன் சின்ஹா

    எம்பிக்கள்

    எம்பிக்கள்

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை டிஆர்எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரசூல்கான் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டாட்சி முன்னணிக்கு போதிய எம்பிக்கள் இல்லை என்றால் காங்கிரஸின் ஆதரவு கோரப்படும்.

    உறுதி

    உறுதி

    ஆனால் அதே நேரத்தில் தலைமை பொறுப்பு காங்கிரஸுக்கு வழங்கப்படாது. மத்திய அரசை வழிநடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்க வேண்டும் என்பதில் ராவ் உறுதியாக இருக்கிறார்.

    கூட்டாட்சி முன்னணி

    கூட்டாட்சி முன்னணி

    பிரதமர் பதவி கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளுக்கே அளிக்கப்படும். கருத்து ஒற்றுமை அடிப்படையில் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படுவர். ஒரு வேளை காங்கிரஸுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கவில்லை என்றால் அந்த கூட்டணியில் திமுக இருந்து பலனில்லை.

    ஆதரவு

    ஆதரவு

    அதனால் கூட்டாட்சி முன்னணிக்கு திமுக வர வாய்ப்புள்ளது என ரசூல்கான் தெரிவித்தார். முன்பு காங்கிரஸுக்கு எதிராக பேசி வந்த ராவ் தற்போது ஸ்டாலினுக்கு மதிப்புக் கொடுத்து காங்கிரஸ் ஆதரவு கோரப்படும் என கூறியுள்ளதாகவே கருதப்படுகிறது.

    English summary
    K.Chandrasekara Rao decides to ask support from Congress to form new government and is not ready to cede driver's seat in that situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X