ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த பேய் வெள்ளம்.. சென்னை 2015-ஐ கண் முன் நிறுத்தும் சோகம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளதால் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Recommended Video

    ஹைதராபாத்தில் பலத்த மழை.. கோர தாண்டவம் ஆடிய வெள்ளம் - வீடியோ

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் வெள்ள நீரில் வீடுகள் தத்தளித்து வருகின்றன. இந்த பேய் மழையால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகிறார்கள்.

     இன்று நாளையும் பொது விடுமுறை.. ஹைதராபாத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. கேடிஆர் இன்று நாளையும் பொது விடுமுறை.. ஹைதராபாத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. கேடிஆர்

    வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்

    வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்

    ஹைதராபாத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையின் தரைதளத்தில் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளநீர் புகுந்தது. பார்ப்பதற்கு காட்டாற்று வெள்ளம் ஆவேசமாக நுழைகிறது.

    மருத்துவமனை நிர்வாகம்

    மருத்துவமனை நிர்வாகம்

    இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உள்நோயாளிகளை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றியது. கார் பார்க்கிங் இடத்தில் படுவேகமாக பாயும் இந்த வெள்ளத்தை பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பெரும் அச்சத்தில் உறைந்தனர். இந்த மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இரண்டாவது தளம்

    இரண்டாவது தளம்

    இந்த சம்பவத்தை பார்க்கும் போது சென்னை வெள்ளம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த வீடியோவில் இருப்பது போன்றே காட்டாற்று வெள்ளம் முடிச்சூர், தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. தரைதளம், முதல் தளம், ஏன் இரண்டாம் தளம் வரை கூட வெள்ளநீர் சூழ்ந்தது.

    100 மில்லி பால்

    100 மில்லி பால்

    வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் அடித்து செல்லப்பட்ட நிலையில் பணக்காரர்களாக இருந்த போதிலும் 100 மில்லி பால் வாங்கக் கூட காசு இல்லாத நிலை பலருக்கு ஏற்பட்டது. இது வேதனைக்குரிய விஷயமாகும். ஏதோ புயல் வந்தால் எப்படி மழை பெய்யுமோ அதுபோல் பெய்து ஹைதராபாத்தையே புரட்டி போட்டுவிட்டது.

    English summary
    Heavy water flow in Somajiguda, Yasodha hospital , Hyderabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X