ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்

மத்திய அரசை விமர்சித்து மாஜி மத்திய அரசு அதிகாரி சுஜாதாராவ் ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நாட்டை மொத்தமாக கை விட்டு விட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சுஜாதா ராவ் போட்டுள்ள டிவீட் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகள் விவாதங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்கு முன்பே பிரச்சாரத்தை முடிக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இரு விதமான கருத்துக்களும் உலா வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் சுஜாதா ராவ் ஒரு டிவீட் போட்டுள்ளார்.

எல்லாமே தலைகீழ்.. இப்படியும் ஒரு தேர்தல் அவசியம்தானா? சலிக்க வைக்கும் 'ஜனநாயக திருவிழா' எல்லாமே தலைகீழ்.. இப்படியும் ஒரு தேர்தல் அவசியம்தானா? சலிக்க வைக்கும் 'ஜனநாயக திருவிழா'

வேதனை

அதில் அவர் தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். கூடவே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைப்பிடித்து வந்த ராஜ தர்மம் குறித்தும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பாரபட்சம்

பாரபட்சம்

சுஜாதா ராவ் வெளியிட்டுள்ள டிவீட்டில், நாட்டிலேயே ஒரு ஐஏஎஸ் அதிகாரி காணும் மிகச் சிறந்த கனவுகளில் ஒன்று தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிதான். ஆனால் இன்று அது மிகவும் பாரபட்சபமான முறையில் கையாளப்பட்டிருப்பது வேதனைக்குரியது என்று சுஜாதா ராவ் கூறியுள்ளார்.

சோகம்

சோகம்

அதே டிவீட்டில் அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சொல்லிக் கொடுத்த ராஜ தர்மத்தை மோடி கடைப்பிடிக்கத் தவறி விட்டார் என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து சுஜாதா ராவ் கூறுகையில், வாஜ்பாய் கற்றுக் கொடுத்த ராஜ தர்மத்தை அவர் கடைப்பிடிக்காமல் விட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது என்று மறைமுகமாக மோடி பெயரைக் குறிப்பிடாமல் சொல்லியுள்ளார் சுஜாதா ராவ்.

பரபரப்பு

பரபரப்பு

முன்னாள் மத்திய அரசு அதிகாரி ஒருவர் இப்படி பிரதமரையும், தலைமைத் தேர்தல் ஆணையரையும் பாரபட்சமானவர்கள் என்று பகிரங்கமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The CEC has had the best postings an IAS officer can aspire and yet he lets down the country with such blatant partisanship. Extremely saddening that he is not doing his raj dharma as Vajpayee would have told him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X