ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேசிக்கொண்டே இருந்தார்.. திடீர்னு எடுத்து சுட போனதால்.. அலறி போன அதிகாரிகள்.. அதிர வைத்த அமைச்சர்!

அதிகாரிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி மந்திரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பேசிக் கொண்டே இருந்தார் மாஜி அமைச்சர்.. திடீரென துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை சுட போனார்.. நேருக்கு நேராக துப்பாக்கியை எடுத்து காட்டி மாஜி மந்திரி மிரட்டவும், அதிகாரிகள் எல்லாரும் உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ருமால்டா என்ற கிராமம் உள்ளது.. இங்கு கால்வாய் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 Former Telangana Minister threatened contractor with Gun

அந்த வகையில், முன்னாள் அமைச்சர் குட்டா மோகன் ரெட்டியின் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாஜி அமைச்சர் ரெட்டியின் நிலத்தில் கால்வாய் விரிவாக்க பணிகளை தொடங்குவதற்காக உள்ளூர் காண்ட்ராக்டர் அங்கு சென்றிருக்கிறார்கள்... அவர்களுடன் ஊழியர்களும் சென்றுள்ளனர்.. இதை கேள்விப்பட்டு, அப்போது அங்கு ஆவேசத்துடன் வந்தார் ரெட்டி.

காண்ட்ராக்டர், ஜேசிபி டிரைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. "என்னுடைய நிலம் எப்படி கையகப்படுத்தலாம், எப்படி வேலையை ஆரம்பிப்பீங்க" என்று சரமாரி கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.. அவருக்கு சட்டரீதியான பதில்களை அதிகாரிகளும் எடுத்து விளக்கமாக சொல்லி கொண்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் ஆண்டவன் கொடுத்த தண்டனை... அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு..! கொரோனா வைரஸ் ஆண்டவன் கொடுத்த தண்டனை... அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு..!

அப்போதும் ஆத்திரம் அடங்காத மாஜி, திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி அவர்களை மிரட்டினார். துப்பாக்கியை பார்த்ததும் அதிகாரிகள் மிரண்டு விட்டனர்.. செய்வதறியாது திகைத்தனர்.. இது அத்தனையையும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.. இதை பார்த்ததும், ரெட்டியுடன் வந்திருந்தவர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.. அதனால் அந்த ஊழியரை அங்கேயே அடித்து துவைத்து எடுத்தனர்.

இதை பார்த்ததும், கான்ட்ராக்டர்கள், என்ஜினியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்த பேரும் உயிரை கையில் பிடித்து தப்பித்து ஓடினர்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இதையடுத்து, தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாஜி அமைச்சர் மீது புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்... விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

English summary
Former Telangana Minister threatened contractor with Gun
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X