ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைதராபாத் தேர்தல்.. அசத்திய பாஜக.. ஓவைசியை நம்பியிருக்க வேண்டிய இக்கட்டான நிலையில் கேசிஆர்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 150 இடங்களில் 56 இடங்களில் மட்டுமே டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 48 இடங்களிலும், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஓவைசியின் ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு தேவை என்ற நிலை உள்ளது. இப்போது ஓவைசி தான் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடந்தது. வழக்கமாக மாநகராட்சி தேர்தல்கள் பெரிய அளவில் கவனத்தை பெறுவது இல்லை. ஆனால் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் என்பது மாநில சட்டசபை தேர்தலைப் போல விறுவிறுப்பாக பார்க்கப்பட்டது,

இதுவரை இல்லாத அளவாக தெலுங்கானாவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் பாஜகவிற்கும் இடையே பிரச்சாரத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் கண்டதால் பாஜக எப்படியும் வெல்லும் என்கிற அளவிற்க எதிர்பார்ப்பு எழுந்தது.

ஹைதராபாத் தேர்தலில் இப்படி ஒரு முடிவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. பாஜக அசுர பலம்.. டிஆர்எஸ் ஷாக்ஹைதராபாத் தேர்தலில் இப்படி ஒரு முடிவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. பாஜக அசுர பலம்.. டிஆர்எஸ் ஷாக்

அதிகரித்த போட்டி

அதிகரித்த போட்டி

இதற்கு காரணம், பாஜகவின் மூத்த தலைவர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பாஜகவின் தேசிய தலைவர்கள் அத்தனை பேருமே முகாமிட்டு பிரசாரம் செய்தனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டி.ஆர்.எஸ் டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டன.

கடும் போட்டி

கடும் போட்டி

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை முதலோ விறுவிறுப்பாக இருந்தது. தபால் வாக்குப்படி பாஜக முன்னிலை வகித்தது. ஆனால் நேரடியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் முடிவுகள் மாறியது. டிஆர்எஸ் கட்சி அதிக இடஙகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. பாஜகவும் அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. 2 வது இடத்தை பிடிப்பதில் ஓவையின் மஜ்லிஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

டிஆர்எஸ் 56 இடங்கள்

டிஆர்எஸ் 56 இடங்கள்

இறுதியில் 56 இடங்களில் மட்டுமே டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 48 இடங்களில் வென்ற அசத்தியது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 150 வார்டுகளில் 76 இடங்களுக்கு மேல் வென்றால் தான் மேயர் பதவியை கைப்பற்றி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

ஓவையின் மஜ்லிஸ் கட்சி தற்போது யாரை ஆதரிக்கிறதோ அந்த கட்சி தான் ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற முடியும். ஆளும் டிஆர்எஸ் கட்சி சென்ற முறை 99 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை பெரிய அளவில் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது ஓவைசி ஆதரவை பெற்றால் மட்டுமே டிஆர்எஸ் கட்சியால் ஹைதராபாத் மாநகராட்சியில் அதிகாரத்திற்கு வர முடியும். ஓவைசி ஆதரிக்காவிட்டால் சாத்தியம் இல்லை. எனவே இப்போது ஓவைசி கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

English summary
A robust performance by the BJP in the GHMC polls has stopped the ruling TRS short of majority in the Hyderabad civic body. The TRS now needs support of its ally AIMIM to rule the GHMC. This was a local election that may have a national political impact.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X