ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா காலத்தில் 5 பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: தெலுங்கானாவில் தலைமை ஆசிரியர் கைது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா காலத்தில் 5 பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெலுங்கானா மாநிலத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தெலுங்கானாவில் ஆகஸ்ட் மாதம் 50% மாணவர்கள், ஆசிரியர்கள் வருகையுடன் பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. இப்படிக்கு பள்ளி சென்று வந்த சில மாணவிகள் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

Govt School Headmaster arrested for abusing minor girls in Telangana

இது தொடர்பாக பெற்றோர்களிடம் கேட்டபோதுதான், பள்ளி தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர்.

ஆண்டுக்கு 4 கட்டங்களாக ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்; பிப்.23- பிப். 26-ல் முதல் கட்ட தேர்வுஆண்டுக்கு 4 கட்டங்களாக ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்; பிப்.23- பிப். 26-ல் முதல் கட்ட தேர்வு

இப்புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுமிகள். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

English summary
A Govt School Headmaster arrested for abusing minor girls in Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X