ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்..யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து களத்தில் அமித்ஷா- அனல் பறக்கிறது!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தந்துள்ளார்.

பாஜக இலக்கு வைத்திருக்கும் தென்மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்களில் பெற்ற படிப்படியான வெற்றியுடன் இப்போது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலையும் பாஜக எதிர்கொண்டிருக்கிறது.

2016 தேர்தல் நிலவரம்

2016 தேர்தல் நிலவரம்

2016 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் டிஆர்எஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. மொத்தம் உள்ள 150 வார்டுகளில் இந்த கூட்டணி 99 இடங்களைப் பெற்றது. ஓவைசியின் கட்சி மட்டும் 44 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 2, தெலுங்குதேச 1 என வென்றது. தற்போது ஹைதராபாத் மாநகராட்சியில் பாஜகவுக்கு 4 கவுன்சிலர்கள்தான் உள்ளனர்.

பாஜகவுக்கு அடுத்தடுத்து வெற்றி

பாஜகவுக்கு அடுத்தடுத்து வெற்றி

ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில் 4 இடங்களில் வென்ற பாஜக அண்மையில் சட்டசபை இடைத்தேர்தலில் வென்றது. இதனால் இம்முறை ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற முடியுமா என களத்தில் நிற்கிறது. டி.ஆர்.எஸ். கட்சியும் ஓவைசி கட்சியும் தனித்து நிற்கும் நிலையில் இது தமக்கு சாதகம் என கணக்குப் போடுகிறது பாஜக.

அமித்ஷா, யோகி ஆதித்யநாத்

அமித்ஷா, யோகி ஆதித்யநாத்

ஒரு மாநகராட்சி தேர்தல் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் பாஜகவின் பிரசார பீரங்கிகளான யோகி ஆதித்யநாத், அமித்ஷா என பெருந்தலைகள் எல்லாம் களமிறக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் நேற்று பிரசார கூட்டத்தில் பேசுகையில், நாங்கள் வெற்றி பெற்றால் ஹைதராபாத் பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என அறிவித்தது மிகப் பெரிய சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் அமித்ஷா

இந்த நிலையில் அமித்ஷா இன்று ஹைதராபத்துக்கு வருகை தந்துள்ளார். ஹைதராபாத் விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் பாக்யலட்சுமி கோவிலுக்கு சென்று அமித்ஷா வழிபாடு நடத்திவிட்டு பிரசாரத்துக்குப் புறப்பட்டார். பாஜகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

English summary
Home Minister Amit Shah greets BJP workers outside Begumpet Airport in Hyderabad, Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X