ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த வெற்றி தான் காரணம்.. இப்போது ஹைதராபாத்.. மொத்தமாக குவிந்த பாஜக தேசிய தலைவர்கள். கேசிஆர் ஷாக்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக அதிரடி வியூகம் வகுத்துள்ளது. பாஜக தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் என பெரும் படையாக ஹைதராபாத்தில் குவிந்து வருகிறார்கள்.

ஹைதராபாத் மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக விரும்புகிறது.

முன்னதாக தெலுங்கானா நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய பாஜக 4 தொகுதிகளில் வென்று அம்மாநில முதல்வர் கேசிஆருக்கு அதிர்ச்சி அளித்தது. அதே பாணியில் இப்போது உள்ளாட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்று அதிரடி வியூகம் வகுத்துள்ளது.

மீண்டும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மீண்டும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்

யோகி

யோகி

இதன்படி பிரச்சாரம் செய்வதற்காக உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஹைதராபாத் வருகிறார்.. அதேபோல் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் வருகிறார் விரைவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியும் வர உள்ளார். எல்லோரும் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்கள்.

நாளை கூட்டம்

நாளை கூட்டம்

இன்று ஜேபி நட்டா பாஜகவின் தேர்தல் பிரச்சார பேரணி நடத்துகிறார். நாளை யோகி ஆதித்யாநாத் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அமித்ஷாவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பாரத் பயோடெக்

பாரத் பயோடெக்

பிரதமர் நரேந்திர மோடியும் நவம்பர் 29ம் தேதி ஹைதராபாத் வருகிறார். ஆனால தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக அல்ல. கொரோனா தடுப்பு மருந்து குறித்த அதிகாரிகளுடன் பேச பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வருகிறார்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்தனர். பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் கே. லக்ஷ்மன், பாஜகவின் பெண்கள் பிரிவுத் தலைவர் வனதி சீனிவாசன் ஆகியோரும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உற்சாகம்

உற்சாகம்

செகந்திராபாத் லோக்சபா எம்பியும் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஏற்கனவே பாஜகவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். துபக் சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்மையில் பெற்ற வெற்றியால், பா.ஜ.க, ஹைதராபாத் மாநகராட்சியை டி.ஆர்.எஸ்ஸிலிருந்து கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நேற்று துபக், இன்று ஹைதராபாத், நாளை தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம் என்று கிஷன் ரெட்டி உறுதி தெரிவித்தார். பாஜகவின் அதிரடியால் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

English summary
several BJP bigwigs, including Union Home Minister Amit Shah and party national president JP Nadda, were arrive in Hyderabad over the next few days to campaign for the party in Greater Hyderabad civic polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X