ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாலையோரம் இருந்த வீட்டுக்கு சென்று தேநீர் குடித்து விட்டு, உரையாடிய நிகழ்வு அம்மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே, திண்ணை பிரச்சாரத்தை போல், அமித்ஷாவின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Amit Shah

இன்று ஹைதராபாத் வந்து சேர்ந்த அவர், பின்னர் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாமிடிப் பள்ளி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கு பழங்குடியினப் பெண்ணான ஜாத்வதி சோனி என்பவரின் வீட்டில் உணவு உண்டு, தேநீர் அருந்தினார். அமித்ஷாவை காண ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.

தெலுங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, ரங்காரெட்டியில் பாஜகவின் உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஹைதராபாத்திற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். தெலுங்கானாவில், தற்போது 18 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 36 லட்சம் உறுப்பினர்களுக்கு குறிவைத்து, மெகா உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக அக்கட்சியின மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

அமித்ஷாவின் இந்த சுற்றுப்பயணம், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், எதிர்வரும் 2023 தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாஜக எம்எல்சி என்.ராம்சந்தர் ராவ் கூறியுள்ளார்.

English summary
Telangana: Home Minister Amit Shah arrives in Hyderabad, he is to visit Rangareddy district, and will have a meal at the residence of a tribal woman Jatvathi Soni in Mamidipally village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X