முதலிரவு.. பல்கலைக்கழக கெஸ்ட் அவுஸில் ஹனிமூன்.. வாடகைக்கு விட்டு பகீர்.. வெடித்த பிரச்சனை.. பரபரப்பு
ஹைதராபாத்: பல்கலைக்கழகத்தில் முதலிரவு நடைபெற்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் பிரபலமானது ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக் கழகம்... காக்கிநாடாவில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்..
மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வு: விதி மீறிய 3 உணவகங்களுக்கு ரூ.52000 அபராதம்!
இந்த பல்கலை கழகத்திலேயே விருந்தினர் மாளிகை ஒன்றும் அமைந்துள்ளது... அங்கு சென்ற அதிகாரிகளுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது... அதாவது, அங்குள்ள அறையை முதலிரவுக்காக தயார் செய்துள்ளனர்.. அந்த ரூமில் இருந்த கட்டிலில் பூக்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது... இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

விருந்தினர் மாளிகை
இதுகுறித்து உடனடியாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.. அப்போதுதான் பகீர் தகவல் வெளியானது.. பல்கலையின் விருந்தினர் மாளிகையில் உள்ள அந்த அறையை, அங்கு பெண்கள் அதிகாரமளித்தல் துறை தலைவராக உள்ள ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் 19ம் தேதிகளில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு எடுத்துள்ளனர்.. அன்றைய தினங்களில் அந்த ரூம் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அலங்காரம்
பூக்களால் அலங்காரம் செய்ததுமே, அந்த ஊழியர்கள் சிலர் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதற்கு பிறகு புதுமண தம்பதியினர், அந்த அறையை முதலிரவுக்கு பயன்படுத்தி உள்ளனர்.. இந்த தம்பதியும், ரூம் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தம்பதி
அதற்கு பிறகுதான் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.. அப்போதுதான், விருந்தினர் மாளிகை ரூமை, முதலிரவுக்கு வாடகைக்கு விட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது... அதுமட்டுமல்ல, அங்கிருந்த மேலும் சில அறைகளில் யாருடைய அனுமதியின்றி, தம்பதியின் பெற்றோர்களும் நண்பர்களும் தங்கியிருந்துள்ளனர்.. இப்படி தங்குவதற்கும் யாரிடமும் அவர்கள் அனுமதியை பெறவில்லை..

முதலிரவு
இந்த அறைகளில்தான், கவுரவ பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் தங்குவார்களாம்.. அவர்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது.. ஆனால், முதலிரவுக்கு வாடகைக்கு விடப்பட்டது குறித்து, தகவல் தெரிந்த மாணவர்கள் கொந்தளித்துவிட்டனர்.. மாணவர் சங்கத்தினர் போராட்டமே நடத்திவிட்டனர்.. பல்கலையின் புனிதம் கெட்டு விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர்.

நடவடிக்கை
விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், இதுகுறித்து விசாரணை நடத்த பல்கலை பதிவாளர் ஸ்ரீனிவாச ராவ், 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்... குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த அறிக்கை, மாநில உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை
இது குறித்து ஸ்ரீனிவாசராவ் மேலும் சொல்லும்போது, "பேராசிரியரின் மாணவருக்காக அந்த அறையை, பல்கலை ஊழியர் முன்பதிவு செய்துள்ளார்... ஆனால், அறையை முன்பதிவு செய்வதற்கான நோக்கம் தவறானது... இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மாநில பெண்கள் ஆணைய தலைவியும், விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்... இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.