India
  • search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளிக்க போன லாவண்யா.. பின்னாடியே சென்ற இளைஞர்.. பாத்ரூமில் இருந்த வந்த அலறல்.. கதிகலங்கிய கர்னூல்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பாத்ரூமில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலையும் செய்துள்ளார் இளைஞர்.. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

கர்னூல் மாவட்டம் கோடூர் மண்டலம் கர்ரென்னபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் முதவத் கிருஷ்ணா.. 28 வயதாகிறது..

இவரது மனைவி பெயர் லாவண்யா ஷ்ரவ்யா.. கல்யாணம் நடந்து 6 வருடங்களாகிறது.. கிருஷ்ணா உள்ளூரில் கூலி வேலை செய்து வந்தார்..

வாட்ச்மேன்

வாட்ச்மேன்

எனினும் அதில் வருமானம் போதாமல், கடந்த இரண்டு மாதங்களுக்குதான், செளதாப்பால் மண்டலம் துபிரான்பேட்டை புறநகரில் உள்ள ஒரு குடோனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார்.. அதனால், மனைவியையும் அழைத்து கொண்டு தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வருகிறார்.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை.. அதனால், இங்கேயே தங்கி வேலை பார்த்து கொண்டே, ஒரு மருத்துவமனையில் சிகிச்சையும் தம்பதியினர் எடுத்து வந்தனர்.

 குடோன்

குடோன்

வேலை பார்க்கும் அந்த குடோனுக்கு பக்கத்திலேயே வீடு எடுத்துள்ளனர்.. இதற்கு பிறகு, கடந்த ஏப்ரல் 12ம் தேதி லாவண்யாவை கிடங்கில் விட்டுவிட்டு, அசோகா பொறியியல் கல்லூரியில் கிருஷ்ணா வாட்ச்மேனாக சேர்ந்தார்... அதாவது காலையில் வேலைக்கு சென்றால், இரவுதான் கிருஷ்ணா வீடு திரும்புவார்.. பகல் முழுக்க லாவண்யா மட்டும் கிடங்கில் தனியாக இருப்பார்..

 சிக்கிய லாவண்யா

சிக்கிய லாவண்யா

இந்த கிடங்கிற்கு பின்புறம் சிமெண்ட் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனி ஒன்று உள்ளது... இந்த கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பலரும், அதனருகிலேயே வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர்.. அப்படி தங்கி வருபவர் பெயர் ஹரிஷ்.. இவர் தினமும், லாவண்யா தனியாக இருப்பதையே கண்காணித்து வந்தார்.. கடந்த திங்கட்கிழமையன்று காலை லாவண்யா பாத்ரூமுக்குள் குளிக்க சென்றார். இவர்களின் பாத்ரூம், அந்த கிடங்குக்கு வெளியே, தனியாக உள்ளது.. அதற்கு கூரை போடப்பட்டுள்ளது.

 பலாத்காரம்

பலாத்காரம்

இதைபார்த்துவிட்ட ஹரிஷ், பின்னாடியே சென்று, பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டார்.. திடீரென லாவண்யாவை கட்டிப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார்.. இதனால் அதிர்ந்து போன லாவண்யா, அங்கிருந்து தப்பி வர முயன்றார்.. ஆனால், ஹரிஷ் பலவந்தமாக லாவண்யாவை, பாத்ரூமில் வைத்தே பலாத்காரம் செய்தார்.. இறுதியில், ஒரு பெரிய செங்கல்லை எடுத்து லாவண்யா மண்டையிலேயே அடித்தார்..

கொலுசுகள்

கொலுசுகள்

மீண்டும் கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்து, அதையும் லாவண்யா தலையிலேயே தாக்கினார்.. இந்த அடுத்தடுத்த தாக்குதலில் லாவண்யா ரத்த வெள்ளத்திலேயே சரிந்து விழுந்தார். அப்போதும் ஹரிஷ் விடவில்லை.. கழுத்தில் கிடந்த லாவண்யாவின் கழுத்தில் தாலி, வெள்ளி கொலுசுகளை அறுத்து கொண்டு ஓடிவிட்டார்.. இரவு நேரம் வழக்கம்போல் வீடு திரும்பினார் கிருஷ்ணா.. வீட்டிற்குள் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்று, பாத்ரூமில் சென்று பார்த்தபோதுதான், லாவண்யா சடலமாக கிடந்ததை கண்டு அலறினார்.. பிணத்தை கண்டு கதறி கதறி அழுதார்..

 க்ளூ கிடைத்தது

க்ளூ கிடைத்தது

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்திற்கும் அனுப்பி வைத்தனர்.. உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் துவங்கினர்.. சம்பவ இடத்தையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், ஒரு ஆணின் செருப்பு கிடந்ததை கண்டுபிடித்தனர்.. இந்த செருப்பு ஒன்றை தவிர, வேறு ஆதாரங்கள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. இருக்கிற ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியதில்தான், லாவண்யா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 லாவண்யா செருப்பு

லாவண்யா செருப்பு

செருப்பை வைத்தே, அந்த கொலையாளியையும் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.. துபிரான்பேட்டை புறநகர்ப் பகுதியில் தச்சுத்தொழிலாளியாக அந்த நபர் வேலை பார்த்து வந்துள்ளார்.. பெயர் ஹரிஷ்.. உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்ததுடன், வாலண்யா கழுத்தில் இருந்து அறுத்து சென்ற, தாலி, வெள்ளி கொலுசுகளையும் கைப்பற்றினர்.. தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

English summary
how did the kurnool police arrested labour and what happened in hyderabad பாத்ரூமுக்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X