ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாப பலி… முதல்வர் இரங்கல்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நாராயணப்பேட்டை மாவட்டம் திலேர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கடந்த ஒரு மாத காலமாக மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. உயரமான இடத்திலிருந்து மண்ணை வெட்டி அள்ளி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தால் அனுமதி பெறாமலே பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

huge mound of Mud fell in Telangana, 10 peoples dead: Chief Minister Mourning

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண் சரிவில் 16 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேரை மட்டும் மற்ற தொழிலாளர்கள் மீட்ட நிலையில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெகபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், மண் சரிவில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தேசிய ஊரக வேலையில் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சிட்னியானது.. சென்னை புரட்சித் தலைவர் MGR-ஆனது.. இன்னும் என்னென்ன கந்தரகோலம் நடக்கப் போகுதோ! மதுரை சிட்னியானது.. சென்னை புரட்சித் தலைவர் MGR-ஆனது.. இன்னும் என்னென்ன கந்தரகோலம் நடக்கப் போகுதோ!

இந்த கொடூர சம்பவத்தை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், இது துரதிர்ஷ்டவசமானது எனக் தெரிவித்துள்ளார். மண்சரிவில் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும், உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
10 women labourers killed in Telangana after a huge mound of mud fell on them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X