• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஓ மை காட்.. மனைவியின் வீடியோ.. தூக்கில் தொங்கி துடிதுடித்து தற்கொலை.. பார்த்து பார்த்து ரசித்த கணவன்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தூக்கில் தொங்கிய மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவர் ஒருவர் குறித்த தகவல் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.. யாருக்கும் எந்தவிதமான நிறைகளுடன் வாழ்க்கை அமைவதில்லை..

எல்லா குடும்பத்திலும் பிரச்சனைகள் வந்தாலும் அதை தவிர்க்கும், தடுக்கும் முயற்சியில் கணவனும் - மனைவியும் சேர்ந்து ஈடுபடுவதே புத்திசாலித்தனமாக உள்ளது.

சென்னையில் பாஜக நிர்வாகி அட்டூழியம்.. வயதான பெண்ணின் வீட்டை பிடுங்கி கொண்டு.. வெளியான ஷாக் தகவல்சென்னையில் பாஜக நிர்வாகி அட்டூழியம்.. வயதான பெண்ணின் வீட்டை பிடுங்கி கொண்டு.. வெளியான ஷாக் தகவல்

கணவன்

கணவன்

ஆனால், சில குடும்பங்களில் சைக்கோ கணவன்களாலேயே பிரச்சனைகள் தலைதூக்கி விடுகின்றன.. இதுபோன்றவர்களை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடிவதில்லை.. குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, சிகரெட்டால் சூடு வைப்பது, தாறுமாறாக அடிப்பது, பெற்ற குழந்தைகளையும் மனசாட்சியே இல்லாமல் தாக்குவது, இப்படி எத்தனையோ கொடுமைகளை செய்யும் கணவன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புருஷன்

புருஷன்

ஆனால், ஒரு சைக்கோ புருஷனின் செயல், பெருத்த அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.. இதுவரை இப்படி ஒரு காரியத்தை மக்கள் கண்டிருக்கவும் மாட்டார்கள், கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.. ஆந்திர பிரதேசத்தில் அந்த கொடுமை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஆத்மகுறு என்ற நகரம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் பெஞ்சலையா..

 கொண்டம்மா

கொண்டம்மா

இவரது மனைவி பெயர் கொண்டம்மா.. கல்யாணம் ஆகி 12 வருடங்களாகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பெஞ்சலைய்யா ஹெச்டிஎப்சி ஏடிஎம் மையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். கொண்டம்மா (நகராட்சி பகுதியில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ்) மெப்மா என்ற திட்டத்தில் வேலை பார்த்து வருபவர்.. கல்யாணம் ஆன சில வருடங்களில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்..

 பெஞ்சலையா

பெஞ்சலையா

ஆனால் நாள் ஆக ஆக, பெஞ்சலையா மனதில் சந்தேகம் குடிபுகுந்தது.. இது தொடர்பாக கொண்டம்மாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.. இதனால் சில காலமாகவே கொண்டம்மா மனவேதனையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே மறுபடி தகராறு ஏற்பட்டுள்ளது... சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளை சொல்லி மனைவியை திட்டி உள்ளார் பெஞ்சலையா.. இதனால் கொண்டம்மா மனம் வெறுத்து போய், வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கு மாட்டி கொள்ள ஓடினார்..

வீடியோ

வீடியோ

'நான் உன்னை தடுக்க மாட்டேன்.. நீ போய் தூக்கு மாட்டிக்கோ' என்று சொல்லி உள்ளார். சேலையை எடுத்து ஃபேனில் மாட்டி தூக்கு போட முயல்வதை, அப்படியே நின்று வேடிக்கை பார்த்தார் பெஞ்சலையா.. ஒருகட்டத்தில் தூக்கில் தொங்க சென்றபோது, உடனே தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாகவும் எடுக்க ஆரம்பித்தார் பெஞ்சலைய்யா.

 துடிதுடிப்பு

துடிதுடிப்பு

இறுதியில் கணவன் கண் எதிரிலேயே கொண்டம்மா தூக்கில் தொங்கியபடி துடி துடித்து உயிரிழந்தார். அப்போதுகூட, அந்த வீடியோவில் பதிவான தற்கொலை காட்சியை ரசித்து ரசித்து பார்த்து கொண்டே இருந்துள்ளார் பெஞ்சலையா.. நீண்ட நேரமாகியும் கணவன் மனைவி இருவரும் வெளியே வராத நிலையில், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்...

 போஸ்ட்மார்ட்டம்

போஸ்ட்மார்ட்டம்

போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.. அப்போதுதான், கணவன் கண்ணெதிரிலேயே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அத்மக்கூறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 வீடியோ

வீடியோ

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது.. இதனைக்கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. மனைவியை கொன்ற கணவனை பார்த்துள்ளோம்.. ஆனால், தற்கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டே அதை வீடியோ எடுத்த கணவனை இப்போதுதான் இந்த நாடு முதல்முறையாக அதிர்ந்து பார்த்து வருகிறது.

English summary
Husband took the video on his wife committing suicide by hanging near Nellore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X