ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படித்தான் செய்ய வேண்டும்.. ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட்.. நிர்பயாவின் தாய் உணர்ச்சி!

ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட் வைக்கிறேன், நீங்கள் நீதியை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள் என்று டெல்லி நிர்பயாயின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் ஒரே குரல்

    ஹைதராபாத்: ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட் வைக்கிறேன், நீங்கள் நீதியை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள் என்று டெல்லி நிர்பயாயின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.

    ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர் செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த என்கவுண்டர் நடந்தது. தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த என்கவுண்டர் குறித்து நிர்பயாவின் தாய் பேட்டி அளித்துள்ளார். ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட். ஹைதராபாத் போலீஸ் துரிதமாக செயல்பட்டுள்ளது. மிக நேர்மையாக செய்ய வேண்டிய நடவடிக்கையை அவர்கள் செய்துள்ளனர்.

    நிம்மதி

    நிம்மதி

    அவர்களை பாராட்டுகிறேன். அவர்களின் இந்த என்கவுண்டர் எனக்கு பெரிய நிம்மதியை கொடுக்கிறது. 4 பேரும் இப்படி தான் கொலை செய்யப்பட வேண்டும்.

    நீதி கிடைத்துள்ளது

    கொல்லப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் நீதி வழங்கி இருக்கிறது.இனிமேல் எல்லாம் மாறும். சட்டத்தை நினைத்து இனிமேல் பயப்படுவார்கள். என் மகளை வன்புணர்வு செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை.

    சட்டம் செயல்பட வேண்டும்

    சட்டம் செயல்பட வேண்டும்

    அவர்களை உடனே சட்டம் முன் நிறுத்தி இதேபோல் போலீசார் தண்டிக்க வேண்டும், என்று நிர்பயாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டார். இது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hyderabad Doctor Murder: I salute the police for the encounter says Nirpaya's mother today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X