ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் அக்காவை உயிரோடு மீ்ட்க வாய்ப்பு இருந்தது.. ஆனால்.. பிரியங்கா ரெட்டி தங்கை கண்ணீர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: போலீஸார் அலைக்கழிக்காதிருந்தால் ஹைதராபாத் பெண் மருத்துவரை உயிருடனாவது மீட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹைதராபாத் நகரம் ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பெண் மருத்துவர். 26 வயதான இவர் கொல்லத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.

இவர் தினந்தோறும் தொண்டபள்ளி டோல்கேட் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் கொல்லத்திற்கு செல்வது வழக்கம்.

பின்தொடர்ந்த 4 பேர்

பின்தொடர்ந்த 4 பேர்

அவ்வாறு கடந்த 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வாகனத்தை நிறுத்தியதை 4 பேர் கொண்ட கும்பல் நோட்டமிட்டது. பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வாகனம் பஞ்சர் ஆகியிருந்தது. அப்போது வாகனத்தை தள்ளிக் கொண்டே சென்ற போது அவரது பின்னால் 4 பேர் பின்தொடர்வதை கண்டு அந்த பெண் அஞ்சினார்.

மறைவான இடத்துக்கு

மறைவான இடத்துக்கு

உடனே வண்டி பஞ்சர் ஆன விஷயத்தையும் தன் பின்னால் 4 பேர் பின்தொடரும் விஷயத்தையும் அந்த பெண் தனது தங்கைக்கு போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். பின்னர் சடலத்தை எடுத்துக் கொண்டு கட்டப்பள்ளி அருகே உள்ள பாலத்தின் அடியில் வைத்து தீ வைத்து எரித்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

இவையெல்லாம் சுங்கச்சாவடி, பெட்ரோல் பங்கில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெரியவந்தது. சைதராபாத் போலீஸார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்பயா கொலையை போல் ஹைதராபாத் பெண் மருத்துவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இதுகுறித்து அந்த பெண்ணின் தங்கை கூறுகையில் தன்னை 4 பேர் பின்தொடர்வதாக கூறிய எனது அக்கா கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அவரது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு சென்றேன். ஆனால் அங்கு இருந்தவர்கள் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய போலீஸாரிடம் சென்றேன்.

போலீஸார் கேட்ட கேள்வி

போலீஸார் கேட்ட கேள்வி

அங்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் இது தங்கள் எல்லை அல்ல என கூறி ஷம்ஷதாபாத் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு சென்ற போது முதலில் எனது அக்காள் யாருடையாவது சென்றுவிட்டாரா என்பது போன்ற கேள்விகளை போலீஸார் கேட்டனர்.

3 மணி நேரம் வீணடித்த போலீஸ்

3 மணி நேரம் வீணடித்த போலீஸ்

பின்னர் அவருக்கு அது போல் ஆண் நண்பர்கள் யாரும் இல்லை என்றவுடன் நீண்ட விசாரணைக்கு பிறகு சம்பவ இடத்துக்கு எங்களுடன் இரு போலீஸாரை அனுப்பி வைத்தனர். நாங்கள் அதிகாலை 4 மணி வரை தேடினோம். என் அக்கா கிடைக்கவில்லை. போலீஸார் மட்டும் அங்கு இங்கு என அலைக்கழிக்காமல் உடனடியாக தேடுதல் வேட்டையை நடத்தியிருந்தால் என் அக்காவை உயிருடனாவது மீட்டிருக்கலாம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது, தங்கள் எல்லை இல்லை என கூறியே 3 மணி நேரத்தை வீணடித்துவிட்டனர் என கதறினார்.

English summary
Hyderabad Doctor's sister accuses Police delayed their investigation and searching operation by saying the place is not under their jurisdiction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X