ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத் தேர்தலில் இப்படி ஒரு முடிவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. பாஜக அசுர பலம்.. டிஆர்எஸ் ஷாக்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி 54 இடங்களில் வென்றுள்ள நிலையில், பாஜக அங்கு முதல்முறையாக 48 இடங்களில் வென்றுள்ளது.

அதேநேரம் அசாருதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஓவைசி கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 150 இடங்களில் 54 இடங்களில் கேசிஆரின் டிஆர்எஸ் கட்சி வென்று இருந்தாலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற டிஆர்எஸ் கட்சியால் முடியும்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்.. டிஆர்எஸ் 54.. பாஜக 50, ஓவைசி 44!ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்.. டிஆர்எஸ் 54.. பாஜக 50, ஓவைசி 44!

கேடிஆர் ஷாக்

கேடிஆர் ஷாக்

இப்படி ஒரு தேர்தல் முடிவை சற்றும் எதர்பார்க்காத டிஆர்எஸ் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து பதிலளித்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் செயல் தலைவர் கே.டி.ஆர், "இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் 25 இடங்களில் டிஆர்எஸ் வெற்றி பெறும் என்று நம்பினேன். கருத்துக் கணிப்புகள் அப்படித்தான் கூறின.

சொற்ப வாக்குகள்

சொற்ப வாக்குகள்

12-13 இடங்களில் கட்சி 200-300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. ஏமாற்றமடைய ஒன்றுமில்லை. நாங்கள் தான் அதிக வெற்றி பெற்ற கட்சி. . முடிவுகள் குறித்து நாங்கள் கட்சிக்குள் விவாதிப்போம். எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

ஜேபி நட்டாவுக்கு பாராட்டு

ஜேபி நட்டாவுக்கு பாராட்டு

இதனிடையே தெலுங்கானாவில் உள்ள பாஜகவினருக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்: "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் வளர்ச்சி அரசியலில் நம்பிக்கை காட்டியதற்காக தெலுங்கானா மக்களுக்கு நன்றி." என்று கூறியுள்ளார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் கட்சி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவையும் அமித்ஷா வாழ்த்தினார்.

என்ன முடிவு

என்ன முடிவு

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் 56 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் வெறும் 3இடத்தில் இருந்த பாஜக இந்த முறை 48 இடத்திற்கு முன்னேறி 2வது இடத்தை பெற்றுள்ளது.

English summary
Reacting to the results of GHMC elections, Telanagna Rashtra Samithi's working president KTR said, "I didn't expect this. I hoped another 25 seats. The exit polls said TRS will win." He added that in 12-13 seats the party lost by 200-300 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X