ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Hyderabad Floods : கடை வீதி.. இத்தனைக்கும் பயங்கர மேடு,, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்துள்ளது. இந்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உதவி கேட்டு கூக்குரலிடும் அவர் மீட்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Recommended Video

    ஹைதராபாத்தில் பலத்த மழை.. கோர தாண்டவம் ஆடிய வெள்ளம் - வீடியோ

    ஹைதராபாத்தின் ஃபலக்னுமாவுக்கு அருகிலுள்ள பார்காஸில் வெள்ளம் பயங்கரமாக பாய்ந்தோடுகிறது இதன்அருகில் தான் முசி ஆறு ஓடுகிறது.

    ஹைதராபாத் செகந்திராபாத்தை இணைக்கும் அந்த இடத்தில் பெரிய பாலம் உள்ளது. அந்த பாலத்தை தொட்டு செல்லும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அந்த பகுதி மொத்தமும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    ஹைதராபாத் மழை: வீடு இடிந்து விபத்து 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி ஹைதராபாத் மழை: வீடு இடிந்து விபத்து 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி

    அடித்துச்செல்லப்பட்ட நபர்

    ஃபலக்னுமா அருகே கடை வீதியில் பாய்ந்தோடும் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் கம்பத்தை பிடித்து தப்ப முயற்சிக்கிறார். ஆனால் வலுவான நீரோட்டம் காரணமாக அவரது முயற்சிதோல்வியில் முடிகிறது, இறுதியில் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை பொதுமக்கள் காப்பாற்றினார்களா என்பது தெரியவில்லை. அவர் நீரில் அடித்துச்செல்லப்படுவதை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

    26 செமீ மழை

    ஹைதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக நகரில் சுமார் 26 செமீ மழை பெய்திருக்கிறது. இது கடந்த 2015ம் ஆண்ட டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பெய்த மழை அளவு ஆகும்.

    கார்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன

    கார்கள், கனரக வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றன. வேகமாக பாய்ந்தோடும் வெள்ளத்தில் நிற்க முடியாமல் அவை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சிகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    முக்கிய சாலையில் வெள்ளம்

    சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. கார்கள் அதில் சிக்கி நகர முடியாமல் உள்ளன. மின் கம்பங்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று எதிர்நோக்கி மக்கள் தவித்து வருகிறார்கள். சில இடங்களில் வீடுகளின் முதல் தளம் வரை கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஹைதராபாத் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் ஆரம்கார் பகுதி முழுவதும் வெள்ளத்தால் காணப்படுகிறது.

    English summary
    A man is seen being swept away by the rampaging floodwater in a dramatic visual that has emerged from Hyderabad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X