• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.... தட்டிக்கேட்ட நபர் அடித்துக்கொலை

|

ஐதராபாத்: எமன் எப்படி யார் உருவத்தில் வருவான் என்று சொல்ல முடியாது. பிறந்த நாளன்று நண்பர்களுடன் பார்ட்டிக்கு போய்விட்டு வந்த இளைஞர் ஒருவர் பொது இடத்தில் இரண்டு பேர் ஜாலியாக இருந்ததைப் பார்த்து தட்டிக்கேட்கப் போய், தலையில் அடிபட்டு உயிரிழந்து விட்டார். பிறந்த நாளே இறந்தநாளாக மாறிய அந்த சோக சம்பவம் ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த நபரின் பெயர் சாய் சாகர் என்பதாகும். கடந்த 13ஆம் அவரது பிறந்த நாள். நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் சாய் சாகர். அப்போது நெக்லஸ் ரோட்டில் ஒரு ஜோடி எல்லை மீறி பொது இடம் என்றும் பாராமல் ஜாலியாக இருந்தனர். அந்த ஆணும் பெண்ணும் வரம்பு மீறி நடந்து கொண்டதை தட்டிக்கேட்டார் சாய் சாகர். அதைப்பார்த்து ஆத்திரமடைந்த அந்த நபர் சாய் சாகரில் தலையில் கல்லை எடுத்துப்போட்டு தாக்கினார்.

Hyderabad: Man hit by rowdy dies in hospital

இதில் பலத்த காயமடைந்த சாய் சாகர் ரத்தம் சொட்ட கீழே சரிந்து விழுந்தார். இந்த சம்பவத்தை பார்த்த நபர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாய் சாகரை மீட்டு அருகில் இருந்த உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சாய் சாகர் உயிரிழந்தார்.

என்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் - 10 ஆண்டுக்குப் பின் காதலன் மீது பெண் புகார்

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாய் சாகரை தாக்கி கொன்ற அந்த நபரை கைது செய்தனர். அந்த நபரின் பெயர் ஜூனாயித், பிரபல ரவுடியான இவர் மீது 16 குற்றவழக்குகள் உள்ளன. மது போதையில் தனது காதலியுடன் இருந்த அவனை, சாய் சாகர் பக்கத்தில் சென்று சத்தம் போடவே ஆத்திரத்தில் அவன் கல்லால் தாக்கியதாக தெரிகிறது. பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து விட்டார்.

உஸ்மானியா மருத்துவமனை முன்பு திரண்ட சாய் சாகரின் உறவினர்கள் அனைவரும் நீதி கேட்டு போராடினர். ரவுடி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ரவுடி என்று தெரியாமல் போய் பிரச்சினையில் சிக்கிக்கொண்டார் சாய் சாகர். அவரது பிறந்தநாளே இறந்தநாளாகிவிட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A 23-year-old marketing executive, Sai Sagar, who suffered head injuries in an alleged assault by rowdy Kabir Khan alias Junaid near People’s Plaza on Thursday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more