ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவா என சந்தேகம்.. முஸ்லீம் நபரை அடக்கம் செய்ய எதிர்ப்பு.. இந்து மயானத்தில் நடந்த இறுதி சடங்கு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இறந்த முஸ்லீம் நபருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சம் காரணமாக அவரை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் காஜா மியா (55). இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டம் ஆகும். இது இங்கிருந்து 200 கி.மீ.தூரம் என்பதால் சொந்த ஊருக்கு அழைத்து செல்லாமல் ஹைதராபாத்திலேயே இறுதிச் சடங்கை நடத்த உறவினர்கள் திட்டமிட்டனர்.

கொரோனா: 2-வது முறையாக புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாளை முதல் அமல் கொரோனா: 2-வது முறையாக புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாளை முதல் அமல்

புறநகர் பகுதி

புறநகர் பகுதி

ஹைதராபாத்தில் புறநகர்ப் பகுதியில் இவரை அடக்கம் செய்ய உடலை கொண்டு சென்ற போது அங்கிருந்தவர்கள் இறந்தவர் கொரோனாவால் இறந்ததாக கூறி அங்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க முடியாது என மறுத்தனர். அவருக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் இறந்தார் என்றும் கூறியும் அந்த மக்கள் இறுதிச் சடங்குகளை செய்ய விடவில்லை.

நல்லடக்கம்

நல்லடக்கம்

இதையடுத்து சந்தீப், சேகர் ஆகிய இரு இளைஞர்களின் உதவியுடன் இந்துக்களின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோல் 14 பேரது உடல்களை புதைக்க அனுமதி மறுத்து அவர்களது உறவினர்கள் சடலத்தை திருப்பி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

வஃக்பு வாரியம்

வஃக்பு வாரியம்

இந்த சம்பவத்தை அடுத்து ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் பாலாபூரில் கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்வதற்காக தனி மயானம் உருவாக்கப்பட்டது. முஸ்லிம் நபரின் உடலை புதைக்க அனுமதி மறுத்தவர்கள் மீது வஃக்பு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவர்

மருத்துவர்

கொரோனாவால் இறந்த நபர்கள் மூலம் நோய் பரவாது என மருத்துவர்கள், நிபுணர்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் திருந்துவதாக இல்லை. இன்னும் மூடநம்பிக்கையிலேயே இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் நோய் பாதித்து இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய விடாமல் விரட்டி அடிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

English summary
Hyderabad Muslim man denied burial over coronavirus suspect and he was buried in Hindu crematory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X