ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ

Google Oneindia Tamil News

Recommended Video

    4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது?

    ஹைதராபாத்: பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 பேரை போலீசார் இன்று என்கவுண்டர் செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

    Hyderabad: Pistol seen in the hand of one the accused

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அதிகாலையில் குற்றவாளிகளை அழைத்துச் சென்று, தடயம், சேகரித்த போது, அவர்கள் போலீசாரை தாக்கினர்.

    போலீசாரின் துப்பாக்கியை பறித்து சுடத் தொடங்கினர். எனவே தற்காப்புக்காக போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு ஆதாரமாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், துப்பாக்கியுடன் கொல்லப்பட்டவர்கள் படுத்துக் கிடப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. போலீசார் சுட்டபோதிலும், கையில் இருந்து துப்பாக்கியை நழுவவிடாமல் கொல்லப்பட்டவர்கள் கையிலேயே துப்பாக்கியை இறுக்கி பிடித்தபடி உயிரை விட்டுள்ளனர் என இந்த போட்டோவை பார்த்தால், தெரிகிறது. இதேபோல கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சாதாரண மினி லாரி ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்படும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்

    இதனிடையே இந்த என்கவுண்டர் சம்பவத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, உண்மை கண்டறியும் குழு ஒன்றை விரைவில் சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளது, என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Hyderabad: Pistol seen in the hand of one the accused in the rape and murder of the woman veterinarian killed in encounter earlier today by Police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X