ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனமழையால் இருளில் மூழ்கிய ஹைதராபாத்: தெலுங்கானாவில் 50 பேர் பலி, ரூ 5000 கோடி அளவிற்கு சேதம்

கனமழை வெள்ளம் காரணமாக ஹைதராபாத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய விடிய மின்சாரம் இன்றி மக்கள் அனைவரும் இருளில் தவித்தனர். மழை வெள்ளத்திற்கு 50 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் ஹைதராபாத் நகரை சூறையாடியது. கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. மழை வெள்ளத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளநீர் ஒருபக்கம், மின்சாரம் துண்டிப்பு மறுபக்கம் என பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தெலுங்கானா மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளச்சேதம் எற்பட்டுள்ளது. 5000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக ஹைதராத் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்து கிடக்கின்றன. ஒரே நாளில் 26 செ.மீ அளவுக்கு மழை கொட்டியதால் ஒட்டுமொத்த நகரமே வெள்ளதேசமாகக் காட்சியளிக்கிறது. வீடு இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வேகமாக வீசிய சூறாவளி காற்று மரங்களை வேறோடு சாய்த்தது. மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.

Hyderabad rains: Death toll rises to 50 Rs 5000 crore losses estimated in CM

மழை வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ராணுவம், பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் முழங்கால் வரை தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

போய்ட்டாரே வெற்றி.. எல்லாத்துக்கும் காரணம் போய்ட்டாரே வெற்றி.. எல்லாத்துக்கும் காரணம் "அந்த ஆபீஸ்"தான்.. அலற வைக்கும் அமமுக சென்ட்டிமென்ட்..!

மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், ஹைதராபாத் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. மழை நீரும் இருளும் சேர்ந்து மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாகியது. தொடர்ந்து மழை பெய்து காரணத்தால், இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Hyderabad rains: Death toll rises to 50 Rs 5000 crore losses estimated in CM

படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கிய பின்னர் வியாழக்கிழமையன்று பலர் வீட்டிற்கு திரும்பினாலும் அங்கேயும் சோகம் காத்திருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் இருளில் மூழ்கிக் கிடந்ததால் தவித்து போயினர் பொதுமக்கள்.

தெலுங்கானாவில் கடந்த 2 வாரங்களில் மட்டும் வழக்கத்தை விட 144 சதவிகிதமும் ஹைதராபாத்தில் 404 சதவிகிதமும் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Hyderabad rains: Death toll rises to 50 Rs 5000 crore losses estimated in CM

தெலுங்கானா மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளச்சேதம் எற்பட்டுள்ளது. 5000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உடனடியாக ரூ. 1350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Hyderabad was hit by floods caused by unprecedented heavy rains. Residential areas were inundated by heavy rains. More than 50 people have been killed in flash floods. The public suffered as the floodwaters receded on one side and power outages on the other. More than 15 areas in Telangana district have been affected by the floods. Chief Minister Chandrasekara Rao has said that the damage has been estimated at Rs 5,000 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X